மதுரை மாநாடு | ”Stalin uncle. very wrong uncle..” - முதல்வருக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய விஜய்!
மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், ஆளும் பாஜக மற்றும் திமுக அரசுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். இதில் அவர் திமுக அரசையும் முதல்வர் ஸ்டாலினையும் குறித்து பேசியது தொடர்பாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
2-வது மாநில மாநாட்டில் பேசிய விஜய்
மதுரையில் தவெகவின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பேசிய தவெக தலைவர் விஜய், ஆளும் பாஜக மற்றும் திமுக அரசுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். நாம் யாருக்கு எதிரானவர்கள் தெரியுமா? மறைமுக உறவுக்காரர்களான பாசிச பாஜகவும், பாய்ஷன் திமுகவும்தான். தொடர்ந்து கொள்கை எதிரி பாஜக எனவும், அரசியல் எதிரி திமுக எனவும் கடும் ஆவேசத்துடன் பேசிய அவர், தமிழகத்தின் முதல்வர் ஸ்டாலின் குறித்தும் கடுமையாக விமர்சித்தார்.
திமுகவைக் கடுமையாக விமர்சித்த விஜய்
“இந்த வெற்றி விளம்பர மாடல் திமுக என்ன செய்கிறது தெரியுமா? பாஜகவுடன் உள்ளுக்குள்ள ஓர் உறவை வைத்துக்கொண்டு வெளியில் எதிர்க்கிற மாதிரி, ஒரு டிராமா ஒன்றைச் செய்துகொண்டு எதிர்க்கட்சியாக இருந்தா, ’போங்க மோடி’ என பலூன் விடுவது, ஆளுங்கட்சியாக இருந்தா, ’வாங்க மோடி’ என குடை பிடித்துக்கொண்டு கும்பிடு போடுவது.
இது மட்டுமா? ரெய்டு என வந்துவிட்டால் போதும். இதுவரைக்கும் போகவே போகாத மீட்டிங் எனக் காரணம் காட்டி டெல்லிப் போவது. ஒரு சீக்ரெட் மீட்டிங் நடத்துவது. நல்லா நோட் பண்ணணும் மக்களே. இந்த மீட்டிங்கிறகுப் பிறகு அந்தச் செய்தி அப்படியே காணாமல் போயிருக்குமே? அதேதான். Stalin uncle. very wrong uncle..
இப்படி தமிழகத்தில் நடக்கும் ஆட்சியின் லட்சணத்தைப் பார்த்துக் கொண்டு நாம் எப்படி சும்மா இருக்க முடியும்? ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அதைச் செய்தது கபடநாடக மு.க.ஸ்டாலின் Uncle-ஆகவே இருந்தாலும்... கேட்போம். uncle... uncle... உங்களுக்கு மனசாட்சி என ஒன்று இருந்தால் நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் கொஞ்சம் பதில் சொல்லுங்கள்” எனச் சொல்லி கேள்விகளை எழுப்பினார்.
திமுகவிற்கு எதிராக கேள்விகளை அடுக்கிய விஜய்
நீங்கள் நடத்தும் இந்த ஆட்சியில் நேர்மை இருக்கிறதா? நியாயம் இருக்கிறதா? ஊழல் இல்லாமல் இருக்கிறதா, சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்கிறதா? பொதுமக்களுக்கோ, பெண்களுக்கோ பாதுகாப்பு இருக்கிறதா? இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா? சொல்லுங்கள், My Dear Uncle... சொல்லுங்கள்?
டாஸ்மாக்கில் மட்டும் இதுவரை 1,000 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள். அதில் மட்டுமா தவறு நடக்கிறது. வேறு எதில் தவறு நடக்கவில்லை? உலகிலேயே Mr. Clean Records எல்லாம் உங்களுக்கும் உங்கள்கூட இருப்பவர்களுக்கும் மட்டும்தான் கொடுக்க வேண்டும். இதைக்கேட்டு வாயே இல்லாத ஊர்கள்கூட வயிறு வலிக்க சிரிக்கும்.
பெண்களுக்கு 1,000 ரூபாய் கொடுத்துவிட்டால் போதுமா ungle? அதை மூடி மறைத்துவிடலாம் என நினைக்குறீர்களா? படிக்கும் இடத்தில், வேலைக்குப் போகும் இடத்தில் என பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை என ஒட்டுமொத்த பெண்களும் பெண் பிள்ளைகளும் கதறுகிறார்கள். அந்தக் கதறல் சத்தம் உங்கள் காதில் கேட்குதா ungle? இதுலவேற, உங்களை ’அப்பா’னு கூப்பிடறதா சொல்றீங்க? What is this Uncle? It's very very wrong Uncle?
தொண்டர்களிடம் பதில் வாங்கிய விஜய்
பெண்களுக்கு மட்டுமா பொய் வாக்குறுதி கொடுத்து ஏமாற்றுனீர்கள்? அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஏமாற்றுகிறீர்கள். விவசாயிகளை ஏமாற்றுகிறீர்கள். பரந்தூரில் பாதிப்பே வராது எனச் சொல்லி ஏமாற்றுகிறீர்கள். மீனவர்களை ஏமாற்றுகிறீர்கள். போதைப் பொருள் கலாசாரத்தை ஒழிக்காமல் ஏமாற்றுகிறீர்கள். அய்யய்யோ... very very wrost ungle. எப்படிக் கேட்டாலும் இவர்களிடமிருந்து எந்தப் பதிலும் வரப்போவது இல்லை. ஏனெனில், இருந்தால்தானே? இப்போது, நம்முடைய ஆட்சியில் இருக்கிற நம்முடைய ungle பதில் சொல்வது இருக்கட்டும். மக்களே நீங்கள் இப்போது சொல்லுங்கள். ‘செய்வோம்.. செய்வோம்’ எனச் சொன்னார்களே. செய்தார்களா? உங்களைத்தான் கேட்கிறேன். சொன்னதை எல்லாம் செய்தார்களா” எனத் தொண்டர்களிடம் கேள்வி எழுப்பினார்.
”2026இல் திமுகவை வீட்டுக்கு அனுப்புவோம்!”
அவர்கள் சத்தமாய்ப் பதில் சொன்னதை வைத்து, “my dear ungle கேட்குதா? மக்களுடைய சத்தம் கேட்குதா? இது வெறும் சாதாரணமான முழக்கம்தான். கூடிய விரைவில் மக்களைப் போய்ச் சந்திக்கப் போகிறேன். அவர்களிடம் மனம்விட்டுப் பேசப் போகிறேன். அதன்பிறகு, இந்தச் சாதாரண முழக்கம், இடிமுழக்கமாக மாறும். அத்துடன் நிற்காது. அந்த இடிமுழக்கம் தமிழ்நாட்டின் போர் முழக்கமாக மாறும். அந்தப் போர் முழக்கம் உங்களை ஒரு நிமிடம்கூடத் தூங்கவிடாது. எல்லோரும் கட்சியை ஆரம்பித்துவிட்டுத்தான் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்வார்கள். ஆனால், நாங்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்றுவிட்டுத்தான் கட்சியையே ஆரம்பித்திருக்கிறோம். ஆகையால் ஒட்டுமொத்தமாக இந்த திமுக ஆட்சியை, கபடநாடக ஆட்சியை 2026இல் வீட்டுக்கு அனுப்புறோம். என்ன நண்பா சரிதானே? என்னா நண்பி, செய்வீர்கள்தானே” என கர்ஜித்தார்.