தவெக 2-வது மாநாடு
தவெக 2-வது மாநாடுபுதிய தலைமுறை

தவெக மதுரை மாநாடு 2.0 - நொடிக்கு நொடி அப்டேட்ஸ்! திமுக, பாஜகவுக்கு கேள்விகள் - விஜய் மாஸ் பேச்சு

தவெக-வின் 2வது மாநாடு நடக்கும் மதுரை பாரபத்தியில் இருந்து நொடிக்கு நொடி அப்டேட் இங்கே....

“234 தொகுதியிலும் நான் வேட்பாளர் என நினைத்து வாக்களியுங்கள்; இந்த முகத்துக்காக வாக்களித்தால், உங்க வீட்டிலுள்ள உங்க வேட்பாளர் ஜெயித்தது போல” என உணர்ச்சிப்பொங்கு பேசிய தவெக தலைவர் விஜய்

“எம்.ஜி.ஆர்-னா யார் தெரியும்ல? அவர் மாஸ் தெரியும்ல? எதிரியை கூட கெஞ்ச வைத்தவர் அவர். இன்று அந்த கட்சி எப்படி இருக்கிறது? அப்பாவி தொண்டர்கள் அதை சொல்லமுடியாமல் வேதனையில் தவிக்கிறார்கள்” - விஜய் பேச்சு

“ஒரு எம்.பி. சீட் கூட கிடைக்கவில்லையென, தமிழ்நாட்டுக்கும் இம்மக்களுக்கும் ஓரவஞ்சணை செய்கிறது பாஜக கீழடி நாகரீகத்தை மறைத்துவிட்டு, எங்க நாகரீகத்தையும் வரலாறையும் அழிக்க உள்ளடி வேலை செய்கிறது. தமிழ்நாட்டை தொட்டா என்ன நடக்குமென தெரிய பல உதாரணங்கள் இருக்கு. உங்க எண்ணம் எப்போதும் நிறைவேறாது” - பாஜகவுக்கு விஜய் கேள்வி

நமது ஒரே கொள்கை எதிரி பாஜகதான். ஒரே அரசியல் எதிரி திமுகதான் - விஜய்

வேட்பாளர் விஜய்...! “234 தொகுதியிலும் நான் வேட்பாளர் என நினைத்து வாக்களியுங்கள்; இந்த முகத்துக்காக வாக்களித்தால், உங்க வீட்டிலுள்ள உங்க வேட்பாளர் ஜெயித்தது போல” என உணர்ச்சிப்பொங்கு பேசிய தவெக தலைவர் விஜய்

ஊரை ஏமாத்துற கட்சி நம்ம கட்சி இல்ல - தவெக தலைவர் விஜய்

“நீட் தேர்வால் நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜீ அவர்களே? மக்கள் சக்தியே இல்லாத ஊழல் கட்சிகளை மிரட்டி அடிபணியவைத்து, 2029 வரை சொகுசு பயணம் போகலாம்னு நினைக்கிறீங்களா ஜீ? என்னதான் நேரடி, மறைமுக கூட்டம் வைத்தாலும் தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க?” - விஜய் பேச்சு

“மாபெரும் மக்கள் சக்தி அணி அணியாக நம்மிடம் இருக்கும்போது, அடிமைக்கூட்டணியில் சேர வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? இது சுயம் இழந்த கூட்டணி இல்ல. சுயமரியாதை கூட்டணி. ஆர்.எஸ்.எஸ்.-இடம் அடிபணிந்துகொண்டு, மதச்சார்பற்ற கூட்டணி என மக்களை ஏமாற்ற மாட்டோம்” - விஜய் பேச்சு

“நமக்கு எதிராக வரும் அத்தனை கூக்குரல்களையும் சின்னதா ஒரு சிரிப்போட கடந்துவிடுவோம்; இந்த மாநாட்டில் ஒலிக்கும் குரல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குரல்” - விஜய்

தப்புக் கணக்கு போடாதீர்கள் - விஜய்

“இது அரசியல் ஆதாயத்துக்காக தொடங்கப்பட்ட கட்சி இல்லங்க; கொள்கை, கோட்பாடுகளுடன், கொள்கைத் தலைவர்களுடன் தொடங்கப்படும் கட்சி. Underground ஆதாயத்துக்காக கூட்டணி வைக்க மாட்டோம்” - விஜய்

“நமக்கு எதிராக வரும் அத்தனை கூக்குரல்களையும் சின்னதா ஒரு சிரிப்போட கடந்துவிடுவோம்; இந்த மாநாட்டில் ஒலிக்கும் குரல், ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் குரல்” - விஜய்

LION IS ALWAYS A LION - விஜய் சொன்ன சிங்கக்கதை சிங்கம்

விஜய் சொன்ன சிங்கக்கதை

சிங்கம் வேட்டைக்கு மட்டும்தான் வெளிய வரும்.. வேடிக்க பாக்க வெளிய வராது. வேட்டையில கூட தன்னவிட பெரிய மிருகங்களதான் குறிவச்சு தாக்கும்; ஜெயிக்கும். எவ்வளவு பசியிருந்தாலும் உயிரில்லாதத தொட்டுக்கூட பார்க்காது. அப்படிப்பட்ட சிங்கம் அவ்வளவு ஈஸியா எதையும் தொடாது.. தொட்டா விடாது. காட்டின் நான்கு பக்கமும் தன் எல்லையை தானே வகுக்கும். அப்படிதான் காட்டையே தன் கட்டுக்குள் வைத்திருக்கும். சிங்கத்திற்கு கூட்டத்தோடு இருக்கவும் தெரியும் தனியாக இருக்கவும் தெரியும். எப்பவும் தன் தனித்தன்மையை இழக்காது. LION IS ALWAYS A LION

சிங்கம் வேட்டைக்கு மட்டுமே வெளியில் வரும்; வேடிக்கை பார்க்க வெளியே வராது; சிங்கம் கர்ஜித்தால் 8 கி.மீ. தூரத்துக்கு அதிரும் - தவெக தலைவர் விஜய்

பேச்சின் தொடக்கத்திலேயே மறைந்த விஜயகாந்தை குறிப்பிட்டு பேசிய தவெக தலைவர் விஜய்!

மதுரை மண்ணை சேர்ந்த விஜயகாந்த் குறித்து பேசியதும் மாநாடு திடலே அதிர்ந்தது....

“மதுரைன்னாலே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும், அழகர் திருவிழாவும், மீனாட்சியம்மனும் நினைவுக்கு வருவாங்க. ஆனால் மாநாட்டுக்காக இந்த மண்ணுக்கு வந்தவுடன், எனக்கு மனசுக்குள் ஓடியது புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் பற்றிதான்; ஆனால் அவரோடு பழகும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை

ஆனால் அவரைப்போலவே குணம் கொண்ட என்னுடைய அண்ணன், புரட்சிக்கலைஞர் கேப்டன் விஜயகாந்த் அவர்களோடு பழகும் வாய்ப்பு எனக்கு நிறையவே கிடைத்தது. மதுரை மண்ணை சேர்ந்த அவரை மறக்க முடியுமா?” என்று பேசினார்.

நமக்கு தலைவரின் வார்த்தைகளே வேதம். தலைவரின் சொல்லே மந்திரம்.. தலைவா நீங்கள் ஆணையிடுங்கள் அது நடந்துவிடும் - தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த்

தவெக தலைவர் விஜய்க்கு, அக்கட்சியின் மதுரை நிர்வாகிகள் ஜல்லிக்கட்டு காளையை நினைவுப்பரிசாக வழங்கியுள்ளனர்

“மதுரையை மீட்ட சுந்தரபாண்டியனை பற்றி படித்திருப்பீர்கள். நாளை தமிழ்நாட்டை மீட்கப்போகும் சுந்தரபாண்டியன், இதோ...” - விஜயை கைகாட்டி தவெக கொள்கை பரப்பு பொதுச்செயலாளர் அருண் ராஜ் பேச்சு

”அண்ணாவைப் போல்.. தலைமை ஏற்க வா என விஜய் அழைக்கிறோம்”

அண்ணா கொண்டு வந்த சமத்துவ அரசியல் திராவிடம் .

மாநாட்டிற்கு ஆளும் கட்சியினர் பல்வேறு கடைகளை உருவாக்கினார்கள் .

அண்ணாவின் குறிக்கோளில் இருந்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் விலகிவிட்டார் .

வாரிசு அரசியல் குறித்து பேசியதால் திமுக அமைச்சரவையிலிருந்து முக்கிய பொறுப்புகளில் இருந்து பி டி ஆர் பள்ளிவேல் தியாகராஜன் ஓரங்கட்டப்பட்டார் .

அதிமுக பாஜக கூட்டணி மூலம் தமிழகத்தில் பின்புற வாசல் மூலமாக பாஜக உள்ளே நுழைய திட்டமிடுகிறது .

மன்னர் ஆட்சியை ஒழிக்க தம்பி தலைமை ஏற்க வா என அண்ணா கூறினார் .

அதே மண்ணில் தம்பி தலைமை ஏற்க வா என விஜய்யை அழைக்கிறோம்

- தேர்தல் பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேச்சு

“யாருங்க சீனியர்?” - நிர்மல் குமார் பேச்சு

“தமிழ்நாட்டுக்கு விடுதலை வேண்டும் என்றால், விஜய் முதல்வராக வேண்டும். இங்கே சீனியர்ஸ் இல்லை என்கிறார்கள் சிலர். யாருங்க சீனியர்? ஓசி என்று ஏளனம் செய்த பொன்முடியா? 1,000 ரூ. திட்டத்தை கொச்சையாக பேசிய துரைமுருகனா? சென்னை மாநகராட்சியை அழித்து அட்டூழியம் செய்யும் சேகர் பாபுவா? பத்திரப்பதிவு ஊழல் செய்யும் மூர்த்தியா? இவர்கள் யாருக்கும் துறையை பற்றி தெரியாது” - தவெக துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார்

ஆயிரக்கணக்கான மக்கள் விஜயை பார்த்தவுடன் மாநாட்டை விட்டு வீடு திரும்பினர்!

தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜயை மாநாட்டிற்கு வருகை தந்திருந்தார் அவரைப் பார்த்தவுடன் மாநாட்டிற்கு வந்த கூட்டம் 50% அப்படியே கலைந்து திரும்பி செல்கிறார்கள் தலைவர் விஜய் என்ன பேசுகிறார் என்பதை கூட கேட்காமல் அவர்கள் வீடு திரும்பி வருகிறார்கள்.

”காலை 4 மணிக்கு வந்தோம்... உணவு, குடிநீர் எதுவும் கிடைக்கவில்லை.. நிற்க முடியாத அளவுக்கு பெருங்கூட்டம். விஜய்யை பார்த்து விட்டோம் அதனால் புறப்படுகிறோம்” - மாநாட்டில் இருந்து கலைந்து செல்லும் நபர்

மாநாட்டு திடலுக்கு எந்த அளவிற்கு கூட்டம் வேகமாகக் கூடியதோ அதே வேகத்தில் கூட்டம் கலைந்து செல்கின்றனர்

NGMPC059

கூட்டத்தைப் பார்த்து மிரண்ட விஜயின் பெற்றோர்.. அதிரும் மதுரை மாநாடு! TVK | Vijay | Madurai

தவெக மாநாட்டு மேடையில் ராம்ப் வாக் வந்த விஜயை நெருங்க, தடுப்புகளை தாண்டி தொண்டர்கள் மேலே ஏறியதால் அதிர்ச்சி.... தடுப்புகளை உடைக்கவும் முயன்ற அவலம்... சட்டென விஜய் காலை பிடித்தபடி அலறிய தொண்டரால் பரபரப்பான சூழ்நிலை!

ராஜ்மோகன் சொன்ன ஒரு வார்த்தை...மாநாட்டை உலுக்கிய சத்தங்கள்! | TVK | Vijay | Madurai

விஜய் நடக்க ஆரம்பித்ததும் ஷாக் கொடுத்த தொண்டர்கள்!

விஜயின் ராம்ப் வாக் முடிந்ததும் தொண்டர்கள் மாநாட்டுத் திடலிருந்து வெளியேற தொடங்கியுள்ளனர்.. விஜயை பார்த்ததும் ஆயிரக்கணக்கானோர் புறப்பட்டு செல்கின்றனர்.

மாநாட்டில் கட்சியின் தலைவர் விஜய் என்ன பேசப் போகிறார் என்பதை கூட கேட்காமல் பெரும் கூட்டம் கலைந்து செல்கிறது

மதுரை மாநாட்டில் தவெக தலைவர் விஜய். தொடர் நேரலை..

கொள்ளை தலைவர்களுக்கு விஜய் மரியாதை..

தவெக மாநாட்டில், கட்சியின் கொள்கைத் தலைவர்களுக்கு மலர்தூவி மரியாதை செய்துவிட்டு, கட்சியின் கொடியை ஏற்றிவைத்தார் விஜய்...

ராம்ப் வாக் பகுதியின் மீது ஏறிய நூற்றுக்கணக்கான தொண்டர்கள் விஜயின் பின்னால் ஓடினர்...

மதுரை மாநாட்டில் விஜய்..

தவெக மாநாட்டுத்திடலில் ஆபத்தான முறையில் தொங்கிக்கொண்டிருக்கும் தொண்டர்கள்...

தவெகவின் 2வது மாநில மாநாட்டின் மேடைக்கு வந்தார் தவெக தலைவர் விஜய்!

மாநாட்டு திடலில் ராம்ப் வாக் செய்யும் விஜய்!

ராம்ப் வாங்க் செய்யும் போது தொண்டர்கள் தூக்கி வீசும் துண்டுகளை எடுத்து தோளில் போட்டுக்கொள்ளும் விஜய்...

மதுரையில் மக்கள் கடல்....

"விஜய் முடிவெடுத்துவிட்டார்".. சற்று நேரத்தில் பேசப்போவது இது தான்"அடித்து சொன்ன டி.என் ரகு!

மாநாட்டு மேடையில் தாய் ஷோபனாவிடம்ஆசி பெற்றார் விஜய்!

மாநாட்டு வந்தார் விஜய்!

தவெக 2ஆவது மாநில மாநாடு தொடங்கியது..

தொடங்கிய மாநாடு..   பனை மரத்தில் ஏறி அமர்ந்த தொண்டர்

"அவர பாக்காம போக மாட்டோம்"..அனல் பறக்க பேசிய தவெக பெண்கள்! | TVK

தவெக மாநாடு : தொண்டர்கள் எடுத்து வந்த படங்கள்

மாநாட்டு மேடையை அருகே உடைத்து கொண்டு தொண்டர்கள் வருகின்றனர்.

தவெக விஜய் மதுரை மாநாடு 2.0 - நேரலை

விஜய்யை பார்க்க வந்த ராஜஸ்தான் ரசிகர்!

சுட்டெரிக்கும் சூரியன் - “எதையும் சந்திப்போம்” என தொண்டர்கள் கருத்து

மாநாட்டிற்கு வந்தவருக்கு நேர்ந்த துயரம்!

தவெக மதுரை மாநாட்டிற்காக சென்னையில் இருந்து சென்ற பிரபாகரன் என்பவருக்கு, சக்கிமங்கலம் அருகே மாரடைப்பு ஏற்பட்டிருந்தது; மேல் சிகிச்சைக்காக அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு தொடங்கியுள்ள நிலையிலும், தொடர்ந்து மாநாட்டுத் திடலை நோக்கி தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர்

தவெக மதுரை மாநாட்டுத் திடலில்... அஜித் உடன் விஜய் இருக்கும் பிரமாண்ட பேனர்

தவெக இரண்டாவது மாநில மாநாடு கலை நிகழ்ச்சிகளுடன் மதுரை பாரபத்தியில் தொடங்கியது

மாநாட்டு மேடைக்கு வந்த விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், தாய் ஷோபனா

ஆதவ் அர்ஜுன், அருண்ராஜ் IRS, சி.டி.ஆர் நிர்மல்குமார் விஜயின் பெற்றோர்களை சந்தித்து ஆசீர்வாதம் பெறுகின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளை சந்திரசேகர் சந்தித்து வருகிறார்.

தவெக மாநாடு நடக்கும் மேடையில், தொண்டர்கள் ஏறிவிடாமல் இருக்க ரேம்ப் வாக்கில் கிரீஸ் தடவப்பட்டுள்ளது

மாநாட்டில் குவிந்த கூட்டத்தைப் போல.. டாஸ்மாக்கில் தொண்டர்கள் முண்டியடித்து மது வாங்கும் காட்சி!

விஜயின் உதவியை தேடி வந்த திருநங்கை

பெரும் கூட்டத்திற்கு நடுவில் வந்த வாகனம்... சூழ்ந்த தொண்டர்கள் | TVK | Vijay | Madurai

மதுரை தவெக மாநாட்டில் மேடைக்கு அருகில் செல்ல வேண்டுமென, எகிறி குதிக்க முயன்ற பெண்... பாதுகாவலர்கள் உதவியோடு தலைகீழாக இறக்கப்பட்ட அதிர்ச்சி காட்சி!

ஆவியூர் மது கடை அருகே வயல் வெளியில் மது அருந்தும் தொண்டர்கள்

கருப்பு கண்ணாடி இல்லாத எம்.ஜி.ஆர், விஜய்-ஐ ஆரத்தழுவி வாழ்த்துவது போல வைக்கப்பட்டுள்ள பேனர்...!

த.வெ.க மாநாடு - பள்ளிகளுக்கு மதியத்திற்கு மேல் விடுமுறை

தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு இன்னும் சற்று நேரத்தில் விஜய் மாநாட்டு திடலுக்கு வரக்கூடிய சூழலில் கூட்டம் அதிகமாகும் என்பதால் மதுரை - தூத்துக்குடி சாலையில் போக்குவரத்து நெரிசல் மற்றும் அதிகளவில் கூட்டம் வர வாய்ப்பு உள்ளதன் காரணமாக எலியார்பத்தி, வலையங்குளம், காரியாபட்டியில் அமைந்துள்ள அரசு பள்ளிகளுக்கு மதியத்துக்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

விஜய் மாநாட்டால் எங்கள் கிராமத்துக்கே பெருமை - பாரபத்தி கிராமத்து மக்கள்

தவெக மாநாடு நடக்கும் இடத்தில், ஆபத்தை உணராமல் பேருந்து மேற்கூரை மீது ஏறி நடனமாடிய அக்கட்சித் தொண்டர்களால் அதிர்ச்சி!

இன்னும் 30 நிமிடத்தில் மாநாடு தொடங்கி இருப்பதாக - புஸ்ஸி ஆனந்த் பேச்சு

அலைமோதும் கூட்டம் அவசர வழித்தடத்திலும் அனுமதிக்கப்படும் தொண்டர்கள் காலை முதல் ஆம்புலன்ஸ் வந்து செல்வதற்கான பாதையில் தொண்டர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது மாநாடு தொடங்க உள்ள நிலையில் அவசர வழி தரத்திலும் தொண்டர்கள் உள்ளே செல்கின்றனர்

தவெக மாநாட்டு திடலில் மருத்துவ உதவிகள் செய்ய வந்த தன்னார்வலர்கள்

மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழியும் தவெக மாநாட்டு திடல்.. | Madurai | TVK | Vijay

டிரோன்கள் மூலம் குடிநீர் பாட்டில்கள் விநியோகம்

மாநாடு முழுவதும் போடப்பட்டுள்ள கிரீன் மேட் - ஆம்புலன்ஸ் உள்ளே செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டதால் அங்குள்ள தவெக தொண்டர்கள் உதவியுடன் மீட்கப்பட்டது.

சத்தியம் செய்த பெண் தொண்டர்கள்.. தவெக பெண்களால் அலறும் மதுரை!

விஜய் உள்ளே வந்த பிறகு.. சீமானின் அரசியல் முடிந்து விட்டதா..? பரபரப்பு தகவல் சொன்ன ஷபீர் அஹமது!

தவெக மாநாட்டில் சகதியில் சிக்கிய ஆம்புலன்ஸ்

உயிரை பணயம் வைக்கும் இளைஞர்கள்..மாநாட்டின் மறுபக்கம் என்ன? | TVK Madurai Maanadu

சீமான் - விஜய் நேருக்கு நேர்.. அடுத்த வியூகம் என்ன..? முக்கிய தகவல் சொன்ன ரவீந்திரன் Vijay | Seeman

தவெக மாநாட்டுக்கு அதிகளவில் வரும் வாகனங்கள்

நாற்காலிகளை குடையாக பிடித்து நிற்கும் தொண்டர்கள் | TVK Madurai Maanadu

மாநாட்டை மாற்றிய வெயில்..அடுத்தடுத்து மயங்கிய தொண்டர்கள்..

வித்தியாசமான முறையில் விஜய் மாநாட்டிற்கு வந்த இளைஞர்! திருச்சியிலிருந்து சிறிய சைக்கிளில் HELMET அணிந்து வந்து கவனம் ஈர்த்த த.வெ.க தொண்டர்.

வெயிலில் தவித்த தொண்டர்கள்.. தூக்கி வீசப்பட்ட குளிர்பானங்கள் | TVK Manadu

எங்கெங்கும் தொண்டர்கள்.. மதுரையே குலுங்கும் பிரம்மாண்டம்.. அசர வைக்கும் ட்ரோன் காட்சிகள்

தவெக மாநாடு நடக்கும் பாரபத்தி பகுதிக்கு அருகிலுள்ள ஆவியூரிலுள்ள டாஸ்மாக்கில், முண்டியடிக்கும் தவெக தொண்டர்கள் கூட்டம்!

"வருங்கால முதல்வருக்காக தள்ளுபடில கொடுக்குறேன்" - பழ வியாபாரி

"விஜய்க்காக வெறியோட வந்துருக்கோம்".. புலி வேடத்தில் வந்து உறுமிய தொண்டர்!

தவெக மாநாட்டுப் பகுதியில் சூறைக்காற்று

சிறிய ரக மிதிவண்டியில் வந்த தொண்டர்...

தகிக்கும் தவெக மாநாட்டு களம்.. காவல்துறை போட்ட உத்தரவு

தவெக மாநாடு... என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது? தொண்டர்கள் நிலை என்ன?

மதுரை தவெக மாநாடு : முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மட்டும் அனுமதி..

தவெக 2வது மாநாடு தொடர்பாக அக்கட்சித் தலைவர் விஜய், தன் உரை குறித்து முன்கூட்டியே நடத்திய யோசனை... 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com