ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனாweb

’எதிராக ரஜினி ரசிகர்கள் தேர்தலில் போட்டியிடுவோம்..’ ஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு கண்டனம்!

ஆதவ் அர்ஜுனை விஜய் கண்டிக்க வேண்டும் இல்லை என்றால் உங்களுக்கு எதிராக ரஜினி ரசிகர்கள் தேர்தலில் போட்டியிடுவோம் என்று ரஜினி ரசிகர்கள் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on
Summary

மதுரையில் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். ரஜினி அரசியலுக்கு வராமல் திமுக மிரட்டியதாக ஆதவ் கூறியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மதுரை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. ரஜினி ரசிகர்கள் தேர்தலில் போட்டியிடுவோம் எனவும், ஆதவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

சமீபத்தில் திமுகவிற்கு எதிரான தவெக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, ரஜினி அரசியலுக்கு வராமல் திமுக பார்த்துக்கொண்டதாகவும், திமுகவின் மிரட்டலால் தான் ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்றும் பேசியிருந்தார்.

ரஜினிகாந்த் - ஆதவ் அர்ஜுனா
ரஜினிகாந்த் - ஆதவ் அர்ஜுனாweb

அவரின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், மதுரை முழுவதும் மதுரை மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் சார்பில்,

காக்கா குஞ்சுகளுக்கும் கள்ளச் சீட்டுக்கும் பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் தலைவா,

"வேதனை வெட்கம் அவமானம்"

"காலம் பேசாது நிச்சயம் பதில் சொல்லும்"

"களத்தில் சந்திப்போம் கதம் கதம்"

என்ற வாசகங்களோடு ரஜினிகாந்தை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

ஆதவ் அர்ஜுனா
"திமுக மிரட்டியதால் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவில்லை.." - தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா

தேர்தலில் ரஜினி ரசிகர்கள் போட்டியிடுவோம்..

மதுரையில் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்ட நிலையில், மதுரை புதூர் பகுதியில் ரஜினியின் நண்பர் ஓய்வு பெற்ற காவல் துறை ADSP குமரவேல், மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மன்ற துணைச் செயலாளர் அழகர்சாமி மற்றும் மதுரை மாநகர் ரஜினி மன்ற நிர்வாகி பால.நமச்சிவாயன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து கண்டனத்தை பதிவுசெய்தனர்.

அப்போது அவர்கள் பேசுகையில், “1996-ல் ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை எதிர்த்து வாதிட்டவர் நடிகர் ரஜினி. புகழின் உச்சத்தை பார்த்தவருக்கு அச்சம் கிடையாது. அரசியலுக்கு வரவில்லை என்றாலும் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறோம். புதிதாக கட்சி ஆரம்பித்தவர்கள் சீண்டி பார்க்க வேண்டாம்.

ரஜினிக்கு யாரையும் பார்த்தும் பயம் கிடையாது. கொரானா காலத்தில் யாரும் பாதிக்கப்பட வேண்டாம் என்றே அரசியலுக்கு வரவில்லை. உங்கள் பேட்டி உங்களுக்கு எதிர்வினையை ஆக்கி விடும். திரிஷா பிரச்சனையை மறைக்கவே ரஜினி பற்றி பேசி மடைமாற்றம் செய்ய ஆதவ் முயற்சி செய்கிறார். ரஜினி தமிழகத்தில் கம்பி இல்லாத மின்சாரம்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்pt desk

விஜய் முதல்வராக ஆசைபடுகிறார். ஆதவ் அர்ஜுனாவை விஜய் கண்டிக்க வேண்டும் இல்லை என்றால் ஆதவ் நிற்கும் தொகுதியில் ரஜினி அனுமதியுடன் சாதாரண தொண்டனை நிறுத்தி தோற்க்கடிப்போம். ஆதவ் மீது விஜய் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிதாக கட்சி துவக்கியவர்கள் எந்த உயிரிழப்பு இல்லாமல் இருக்க கற்று கொள்ளுங்கள்" என்று கண்டனம் தெரிவித்தனர்.

ஆதவ் அர்ஜுனா
கரூர் சம்பவம்| 'தவெக ஆட்சியில் திமுகவினர் கைது செய்யப்படுவார்கள்..' - ஆதவ் அர்ஜுனா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com