ஆடு, மாடுகள்
ஆடு, மாடுகள்NGMPC22 - 158

மதுரை | நாதகவின் புது சம்பவம்.. ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளுக்கு முன்பு இன்று உரையாற்றுகிறார் சீமான்!

ஆயிரக்கணக்கான ஆடு மாடுகளை ஒரே இடத்தில் கொண்டு வந்து பிரம்மாண்டமான மாநாட்டை இன்று நடத்துகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
Published on

ஆயிரக்கணக்கான ஆடு மாடுகளை ஒரே இடத்தில் கொண்டு வந்து பிரம்மாண்டமான மாநாட்டை இன்று நடத்துகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் கிட்டத்தட்ட முடிந்த நிலையில், மாநாட்டுத் திடலில் மாடுகளை கொண்டுவரப்பட்டுள்ளன. மாநாட்டுத் திடலில் சீமானே நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார். மதுரையில் சீமான் போடும் திட்டம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய காடுகளில் ஆடு, மாடுகளை மேய்க்க தடை விதித்துள்ளது தமிழக அரசு. இதனால், கால்நடைகளின் உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நிலையில், மேய்ச்சல் நிலங்களை மீட்க வேண்டும், ஆடு மாடுகளை வனப்பகுதிகளில் அனுமதிக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளது. இந்த நிலையில், இயற்கை விவசாயம், விவசாயம் சார்ந்த உப தொழில்கள், ஆடு, மாடுகள் வளர்ப்பு, கோழிகள் வளர்ப்பு, பனை- தென்னையில் கள் எடுப்பது, என தற்சார்பு வாழ்வியல் குறித்து தொடர்ந்து முழங்கி வரும் சீமான், ஆடு மாடுகளை காடுகளில் மேய்ச்சலுக்கு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பரப்புரையை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.

இதற்காக ஆடு, மாடுகளை முன்னிறுத்தி பிரம்மாண்ட மாநாடு ஒன்று திட்டமிடப்பட்டது. மதுரை விராதனூர் பகுதியில் இதற்கான இடம் தேர்வாகி கடந்த 10 நாட்களாக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வந்தன. நடு முள் காட்டுப் பகுதி அருகே, நாட்டு வகை கிடை மாடுகளை திடலில் நிறுத்தி, அதற்கு முன்பு மேடை அமைப்பு பேச திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக, மாடுகளை மாநாட்டுத் திடலில் கொண்டு வந்து மாநாடு ஒத்திகையும் நடந்துள்ளது. இன்று நடைபெறும் இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான ஆடு, மாடுகளுக்கு முன்னிலையில், மேடையில் நின்று பேச இருக்கிறார் சீமான்.

ஆடு, மாடுகள்
கொடைக்கானல்| ’மொபைலில் வரும் கதைகளை படித்தாலே வருமானம்..’ 300-க்கும் மேற்பட்டோரிடம் 1 கோடி மோசடி!

முதற்கட்டமாக, மாநாட்டுத் திடலுக்கு தொண்டர்களுடன் வந்த சீமான், ஸ்பீக்கர்களைப் பொறுத்தி பேசிப்பார்த்தார். ஸ்பீக்கரில் குரலைக் கேட்டு மாடுகள் மிரளுகிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது. பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதால், ஆடு மாடுகளோடு, அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் நாதக தொண்டர்கள் நாளைய தினம் மாநாட்டில் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com