மதுரை: தனது திருமணத்தை மீறிய உறவை தெரிந்து கொண்ட 5 வயது மகளை கொலை செய்த தாய்

மேலூர் அருகே திருமணத்தை மீறிய உறவை தெரிந்து கொண்ட மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் உட்பட இருவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Malar selvi
Malar selvipt desk

செய்தியாளர்: ரமேஷ்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உலகநாதபுரத்தை சேர்ந்தவர்கள் சமயமுத்து – மலர் செல்வி தம்பதியர். இவர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணமான நிலையில், 2 பெண் குழந்தைகள் உள்ளனர். சமயமுத்து துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று அவரது தாய், தன் ஐந்து வயது மகள் கார்த்திகா மாயமானதாகக் கூறி தேடி வந்துள்ளனர். இதுகுறித்து காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Police station
Police stationpt desk

இந்நிலையில், மாயமான சிறுமி குறித்து தாய் மலர் செல்வியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. மலர் செல்வி அதே பகுதியைச் சேர்ந்த உறவினரான இளைஞர் ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பது இளைய மகள் கார்த்திகாவுக்கு தெரியவந்துள்ளது. இதனால் மலர் செல்வி, தனது மகள் கார்த்திகாவை கிணற்றில் தள்ளி கொலை செய்ததும் தெரியவந்துள்ளது.

Malar selvi
திருச்சூர்: செவிலியரின் அலட்சியத்தால் நடக்கமுடியாமல் போன குழந்தை; நீதி கேட்கும் தந்தை

இதையடுத்து சிறுமியின் சடலத்தை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து தாய் மலர் செல்வி மற்றும் இளைஞர் தர்ம சுந்தர் ஆகிய இருவரிடமும் மேலூர் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் தர்ம சுந்தருக்கு திருமணமாகி (மே-19) 3 நாட்களே ஆனது தெரியவந்துள்ளது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com