திருச்சூர்: செவிலியரின் அலட்சியத்தால் நடக்கமுடியாமல் போன குழந்தை; நீதி கேட்கும் தந்தை

கடந்த வருடம் டிசம்பர் 1ம் தேதி முகமது கசாலி, அதிக தலைவலி மற்றும் வாந்தி எடுத்ததால் பள்ளியிலிருந்து மதியம் வந்துள்ளார். ஹபீபா கசாலியை தூக்கிக்கொண்டு சாவக்காடு தாலுகா மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
பாதிக்கப்பட்ட குழந்தை
பாதிக்கப்பட்ட குழந்தைமனோரமா

திருச்சூர் அஜ்மான் சாவக்காடு பழையூரைச் சேர்ந்தவர் ஷபீல் அலிக்குட்டி. இவர் ஷார்ஜாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹபீபா. இவர் சாவக்காடு பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைபார்த்து வருகிறார். இவர்களது மகன் முகமது கசாலி இரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் 1-ம் தேதி முகமது கசாலி, அதிக தலைவலி மற்றும் வாந்தி எடுத்ததால் பள்ளியிலிருந்து மதியம் வந்துள்ளார். ஹபீபா கசாலியை தூக்கிக்கொண்டு சாவக்காடு தாலுகா மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மருத்துவர் கசாலியை பரிசோதித்துவிட்டு, முதலில் வாந்தியை நிப்பாட்டும் பொருட்டு ஆண் செவிலியரை அழைத்து குழந்தையின் கையில் ஒரு ஊசியை போட சொல்லி இருக்கிறார். ஊசி வலி தாங்காமல் குழந்தை அழவும், தலைவலிக்கான ஊசியை சிறிது நேரம் கழித்து போடலாம் என்று செவிலியரைக் கேட்டுக்கொண்டுள்ளார் ஹபீபா. குழந்தையும் தலைவலியினால் தொடர்ந்து அழுதுகொண்டிருந்துள்ளது.

பாதிக்கப்பட்ட குழந்தை
“விமான ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால்தான் என் கணவரை காப்பாற்ற முடியல; அதனால்..”- பெண் வைத்த கோரிக்கை

சிறிது நேரம் கழித்து தலைவலிக்கான ஊசியை சற்று கோவத்துடன் செவிலியர் கசாலியின் இடுப்பில் போட்டதாக கூறப்படுகிறது. அச்சமயம் கசாலி, கால் ஏதோ செய்வதாகக் கூறி அழுதுள்ளார். அதற்கள் ஊசிபோட்ட இடுப்புப்பகுதி வீங்கிவிட்டு இருக்கிறது. இது சாதாரணமான ஒன்றுதான், சிலருக்கு இப்படி வீங்கும். சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று மருத்துவர் கூறவும், ஹபீபாவும் குழந்தையைக் கூட்டிக்கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாக குழந்தையின் இடுப்புப்பகுதியில் இருந்த வீக்கமானது குறையாமல் இருந்துள்ளது. கவலைக்கொண்ட ஹபீபா அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு குழந்தை கசாலியை கூட்டிக்கொண்டு சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர், இடுப்பில் ஊசிபோட்டதால் குழந்தையின் கால் நரம்பு பாதிக்கப்பட்டுள்ளது. ஆகையால் குழந்தையால் சரிவர நடக்கமுடியாது என்று கூறவும், ஹபீபா தலையில் இடிவிழுந்ததுபோல் உணர்ந்துள்ளார். உடனடியாக இந்த தகவலை ஷார்ஜாவில் உள்ள ஷபீல் அலிக்குட்டியிடம் தெரிவித்துள்ளார்.

குழந்தையின் நிலையைக் கண்டு கவலையடைந்த ஷபீல், ஊசி போட்ட செவிலியரை விசாரிக்கையில், கசாலி இடுப்பில் ஊசி போடும்பொழுது தன்னை உதைத்ததால், கொஞ்சம் கோபமடைந்து ஊசி போட்டதாக செவிலியர் தெரிவித்துள்ளார்.

ஊசி என்றால் குழந்தைகள் அழத்தான் செய்யும், ஒரு செவிலியர் கோபம் கொள்ளாது தனது வேலையை செய்திருக்கவேண்டும், இதனால் பாதிக்கப்பட்டது தனது குழந்தைதான். ஆகையால் குழந்தைக்கு நீதி கிடைக்கும் வரை போராடப்போவதாக தெரிவித்துள்ளார் ஷபீல். மேலும், எங்களின் வாழ்க்கையை வைத்து விளையாடியுள்ளார்கள், நாங்கள் அனுபவிக்கும் இழப்பு மற்றும் உணர்ச்சி, சித்திரவதைகளுக்கு மருத்துவமனை பதில் கூறவேண்டும் என்று தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com