சூரி ரசிகர்கள் கொண்டாட்டம்pt desk
தமிழ்நாடு
மதுரை | மாமன் படம் ரிலீஸ் - பேனருக்கு பாலாபிஷேகம் செய்து சூரி ரசிகர்கள் கொண்டாட்டம்
மதுரையில் சூரி கதாநாயகனாக நடித்துள்ள மாமன் திரைப்படம் இன்று வெளியான நிலையில், பால்குடம் எடுத்து வந்து பேனருக்கு பாலபிஷேகம் செய்து அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர்: செ.சுபாஷ்
இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி ராஜ்கிரண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள மாமன் திரைப்படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அதனை நடிகர் சூரியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்
இந்நிலையில், மதுரை திருநகரில் உள்ள தேவி கலைவாணி திரையரங்கில் மாமன் திரைப்படம் வெளியாகியுள்ளது. இதை அவரது ரசிகர்கள் ரசிகர் மன்ற கொடியை ஏந்தியவாறு பெண்கள் பால்குடம் எடுத்து வந்து பட்டாசுகள் வெடித்து மேள தாளங்கள் முழங்க ஊர்வலமாக வந்து திரையரங்கில் வைக்கப்பட்டிருந்த சூரியின் பேனருக்கு பாலபிஷேகம் செய்தனர்.