Indigo Flight
Indigo FlightPt Desk

மதுரை | மோசமான வானிலை... வானத்தில் வட்டமடித்த விமானம் - அச்சத்தில் பயணிகள் - நடந்தது என்ன?

ஹைதராபாத்தில் இருந்து பயணிகளுடன் மதுரைக்கு வந்த இண்டிகோ விமானம், மோசமான வானிலை காரணமாக வானில் வட்டமடித்து அரைமணி நேரத்திற்குப் பிறகு தரையிறங்கியதால் பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
Published on

செய்தியாளர்: செ.சுபாஷ்

ஹைதராபாத்தில் இருந்து வழக்கம் போல் இன்று மாலை 3 மணிக்கு பயணிகளுடன் புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் 3:25 மணிக்கு புறப்பட்டது. இந்நிலையில், சரியாக 4:30 மணி அளவில் மதுரை விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய விமானம் மதுரை மாவட்டத்தில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் மோசமான வானிலை காரணமாக அரை மணி நேரத்திற்கு மேலாக சிவகங்கை விருதுநகர் உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளின் மேலே வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருந்தது.

Indigo Flight
புதுக்கோட்டை | பிறந்தநாள் விழாவில் உணவு சாப்பிட்ட ஒருவர் உயிரிழப்பு - 54 பேருக்கு தீவிர சிகிச்சை

இதையடுத்து மதுரை விமான நிலையம் பகுதியில் வானிலை சீரானதைத் தொடர்ந்து 5:40 மணிக்கு மேல் இண்டிகோ விமானம் தரையிறக்கப்பட்டது. மோசமான வானிலை காரணமாக பயணிகளுடன் நீண்ட நேரம் விமானம் வானில் வட்டமடித்தது பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com