கொரோனா சிறப்பு வார்டு
கொரோனா சிறப்பு வார்டுpt desk

மதுரை | முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அரசு இராஜாஜி மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டு

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் கொரானா சிகிச்சை சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.
Published on

செய்தியாளர்: மணிகண்டபிரபு

இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் தமிழகத்தில் கொரோனா பரவல் சற்று உயர்ந்து உள்ளது. இந்நிலையில், கொரோனா குறித்து அச்சப்படத் தேவையில்லை என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதையடுத்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 50 படுக்கை வசதிகளுடன் கூடிய சிறப்பு வார்டு தொடங்கப்பட்டுள்ளது.

madurai GH
madurai GH pt desk
கொரோனா சிறப்பு வார்டு
அண்ணாமலை வைத்த பரபரப்பு குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொடுத்த பதில்!

கொரோனா உடை, கையுறைகள், முகக்கவசம், ஆக்ஸிஜன் வசதி உள்ளிட்ட உபகரணங்கள் மற்றும் மூச்சுத் திணறலுக்கு சிகிச்சை அளிக்கும் கருவிகள், மருந்துகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று யாருக்கும் இல்லாத நிலையில், மதுரை விமான நிலையத்திற்கு அறிகுறியுடன் வரும் பயணிகளை உடனடி தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வார்டு தயார் நிலையில் உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com