நகைச்சுவை நடிகர் கிங்காங்
நகைச்சுவை நடிகர் கிங்காங்pt desk

திரையிலும் தரையிலும் நடிகர் அஜித் தான் ஹீரோ - அழகர் கோயிலில் நகைச்சுவை நடிகர் கிங்காங் பேட்டி

அழகர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த நகைச்சுவை நடிகர் கிங்காங், திரையிலும் தரையிலும் ஹீரோ அஜித் என புகழாரம் ;சூட்டினார்.
Published on

செய்தியாளர்: ரமேஷ்

மதுரை கள்ளழகர் திருக்கோயிலில் திரைப்பட நகைச்சுவை நடிகர் கிங்காங் சுவாமி தரிசனம் செய்தார். சித்திரைத் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், இன்று அழகர் கோவிலில் தரிசனம் செய்து வெளியே வந்த நிலையில் பக்தர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதைத் தொடர்ந்து நடிகர் கிங்காங் செய்தியாளரிடம் பேசுகையில்...,

இதுவரை மதுரை சித்திரைத் திருவிழாவை தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் பார்த்த எனக்கு, நேரில் வந்து சாமி தரிசனம் மற்றும் விழாவை காண்பது மிக்க மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது. இன்று கள்ளழகரை சிறப்பாக தரிசனம் செய்து அவருடைய ஆசி அனைவருக்கும் கிடைக்கட்டும். திரைப்பட நகைச்சுவை நடிகர்கள் கதாநாயகர்களாக நடிப்பது எம்.எஸ்.கிருஷ்ணன் காலத்தில் இருந்தே தொடர்ந்து வருகிறது,

நகைச்சுவை நடிகர் கிங்காங்
மதுரை | மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

அவர்களது நடிப்பை மக்கள் ரசித்து ஏற்றுக் கொள்கின்றனர், இது வரவேற்கத் தக்க விஷயம். சினிமாவை நான் விரும்புகின்றேன், ஆனால், தற்போது உள்ளவர்கள், 4 - 5 படங்களில் நடித்து வருகின்றேன், கடவுளின் ஆசியும் ரசிகர்களின் ஆதரவும் என்றும் எனக்கு உள்ளது.

நகைச்சுவை நடிகர் கிங்காங்
சென்னை | தெருவில் செல்வோரை விரட்டி விரட்டிக் கடித்த தெரு நாய் - அச்சத்தில் பொதுமக்கள்

நடிகர் அஜித் தன்னம்பிக்கையின் உதாரணமாக இருக்கின்றார். அவர், திரையிலும், தரையிலும் (கார் ரேஸ்) ஹீரோவாக திகழ்கின்றார். சினிமா முன்பை விட தற்போது சிறப்பாக இருக்கிறது. நடிகர் விஜய் அரசியல் பயணம் குறித்த கேள்விக்கு. தற்போது கோயிலுக்கு வந்துள்ள நிலையில், அரசியல் குறித்த கேள்வி வேண்டாம் என்று கிங்காங் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com