அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்pt desk

”எந்தாண்டும் இல்லாத வகையில் சித்திரை திருவிழா சிறப்பாக நடத்தப்படும்” – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

கடந்தகால அனுபவங்களை கொண்டு சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்துவோம். விஐபிகளுக்கு ஸ்வைப் செய்யும் வகையிலான அனுமதி அட்டை கொடுத்து திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்படமு; என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.
Published on

செய்தியாளர்: மணிகண்டபிரபு

உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரை திருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மே 17ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் மே 6ம் தேதியன்றும், மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் மே 8ம் தேதியும், மே 9ம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தோரோட்டம், மே 11ல் கள்ளழகர் எதிர்சேவை, சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு மே 12ஆம் தேதி சித்ரா பௌர்ணமி தினத்தன்று நடைபெற உள்ளது.

சித்திரை திருவிழா தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் மதுரை மாநகரம் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழாவாக சித்திரை திருவிழா நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் குறித்து வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பழனிவேல்தியாகராஜன் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
திருத்தணி முருகன் கோயிலில் நடிகை கௌதமி சாமி தரிசனம்

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள் பேசுகையில், மதுரையில் நடைபெறவுள்ள சித்திரை திருவிழா கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் கள்ளழகரை சரியான நேரத்திற்கு வைகையாற்றுக்கு கொண்டு வர வேண்டும். கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்விற்கு விஐபிகளை வழக்கமான வழியில் இல்லாமல் மாற்று வழியில் உள்ளே அழைத்துச் செல்வது குறித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். வெயில் கடுமையாக இருக்கும் என்பதால் தண்ணீர் தொட்டிகளை அதிகளவில் வைக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

pt desk
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
நாகை | திருச்செங்காட்டங்குடி திருத் தேரோட்டம் - பக்தி பரவசத்தோடு வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில்... எந்தாண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு மதுரை சித்திரை திருவிழா சிறப்பாக நடத்தப்படும். கடந்த கால அனுபவங்களைக் கொண்டு சித்திரை திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யப்படும். வைகை ஆற்றில் விரைவில் கள்ளழகர் திருவிழாவிற்காக தண்ணீர் திறக்கப்படும்.

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் கள்ளழகர் திருவிழாவின் போது விஐபிகளுக்கு வழக்கமான அடையாள அட்டையை விட ஸ்கேன் மற்றும் ஸ்வைப் செய்து அனுமதிக்கும் வகையிலான அனுமதி அட்டைகள் கொடுக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com