16 வயதிற்கு கீழ் உள்ளோருக்கு இணையதள தடை வேண்டும் என பரிந்துரை
16 வயதிற்கு கீழ் உள்ளோருக்கு இணையதள தடை வேண்டும் என பரிந்துரைweb

16 வயதிற்கு கீழ் உள்ளோருக்கு இணையதள தடை வேண்டும்.. உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பரிந்துரை!

16 வயதிற்கு கீழ் உள்ள இளையோர்கள் ஆபாச வீடியோக்களை பார்ப்பதை தடுப்பதற்கு இணையதள தடை வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு பரிந்துரைத்துள்ளது.
Published on
Summary

மதுரை உயர்நீதிமன்றம், 16 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு இணையதள தடை விதிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. ஆபாச வீடியோக்களை தடுக்க மென்பொருள் அவசியம் எனவும், இதுபோன்ற வீடியோக்கள் குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதுவரை, குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறினர்.

தேசிய குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி ஆபாச வீடியோக்களை தடுக்கும் விதமான ‘சாப்ட்வேர்' (மென்பொருளை) பயன்படுத்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலர், உள்துறை செயலர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என்ற வழக்கு மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அதில், ஆஸ்திரேலியா நாட்டில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இணையதளத்தை பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற தடையை மத்திய அரசும் கொண்டு வரவேண்டும் எனவும், அதுவரை, இந்த விவகாரம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளும், குழந்தைகள் உரிமை ஆணையங்களும் மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

குழந்தைகள் இணையதளம் பயன்படுத்த தடை
குழந்தைகள் இணையதளம் பயன்படுத்த தடைmeta ai

மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, இதுபோன்ற சர்ச்சைக்குரிய வீடியோவை தடுக்க வழிகள் உள்ளன. ஆனால், ஆபாச படங்களை குழந்தைகள் பார்ப்பதை முற்றிலும் தடுக்க வழிவகை செய்ய மென்பொருள் அவசியம் தேவைப்படுகிறது எனவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுபோன்ற அருவருப்பான காட்சிகளை பார்ப்பதும், தவிர்ப்பதும் அவரவர் விருப்பம் மற்றும் உரிமை சார்ந்ததாக இருந்தாலும், இதுபோன்ற வீடியோக்களை குழந்தைகள் பார்த்தால் பாதிப்பு அதிகம் ஏற்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

16 வயதிற்கு கீழ் உள்ளோருக்கு இணையதள தடை வேண்டும் என பரிந்துரை
தூக்கப் பிரச்னைகளை எதிர்கொள்ளும் குழந்தைகள்.. பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?

மதுரை அமர்வில் விஜயகுமார் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், “இணைய தளங்களில் ஆபாச வீடியோ படங்கள் தாராளமாக உலாவுகின்றன. இதுபோன்ற ஆபாச படங்களை யார் வேண்டுமானாலும் பார்க்கலாம் என்ற நிலை தற்போது உள்ளது. இதனால், சிறுவர், சிறுமிகளின் எதிர்காலம் பாழாகும். எனவே, தேசிய குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தின்படி இதுபோன்ற ஆபாச வீடியோக்களை தடுக்கும் விதமான ‘சாப்ட்வேர்' (மென்பொருளை) பயன்படுத்த வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் செயலர், உள்துறை செயலர், தேசிய மற்றும் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையங்களின் உறுப்பினர் செயலர்கள், இன்டர்நெட் சர்வீசஸ் புரோவைடர் சங்கத்தின் செயலர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும்'' என கூறியிருந்தார்.

உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு
உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுpt desk

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு, "மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, இதுபோன்ற சர்ச்சைக்குரிய வீடியோவை தடுக்க வழிகள் உள்ளன. ஆனால், ஆபாச படங்களை குழந்தைகள் பார்ப்பதை முற்றிலும் தடுக்க வழிவகை செய்ய மென்பொருள் அவசியம் தேவைப்படுகிறது. இதுபோன்ற அருவருப்பான காட்சிகளை பார்ப்பதும், தவிர்ப்பதும் அவரவர் விருப்பம் மற்றும் உரிமை சார்ந்ததாக இருந்தாலும், இதுபோன்ற வீடியோக்களை குழந்தைகள் பார்த்தால் பாதிப்பு அதிகம் ஏற்படும். அதனால், ஆஸ்திரேலியா நாட்டில் 16 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் இணையதளத்தை பார்ப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற தடையை மத்திய அரசும் கொண்டு வரவேண்டும். அதுவரை, இந்த விவகாரம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகளும், குழந்தைகள் உரிமை ஆணையங்களும் மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.

16 வயதிற்கு கீழ் உள்ளோருக்கு இணையதள தடை வேண்டும் என பரிந்துரை
10 ஆண்டுகளில் 1.84 லட்சம் குழந்தைகள் காணாமல் போனதாக புகார்! தலைநகர் டெல்லியில் என்ன நடக்கிறது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com