அம்பிகா தியேட்டர் - மூடப்பட உள்ளதால் ரசிகர்கள் வேதனை
அம்பிகா தியேட்டர் - மூடப்பட உள்ளதால் ரசிகர்கள் வேதனைpt desk

மதுரை | ரசிகர்களை பல ஆண்டுகளாக மகிழ்வித்து வந்த பிரபல தியேட்டர் மூடல் - ரசிகர்கள் வேதனை!

மதுரையில் அண்ணா நகரில் உள்ள பிரபல அம்பிகா சினிமா தியேட்டர் இடிக்கப்பட உள்ளது. இது ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
Published on

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை அண்ணாநகர் பகுதியில் அம்பிகா திரையரங்கம் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது. மதுரையில் முதன் முறையாக டிடிஎஸ் சவுண்ட் சிஸ்டத்துடன் ரட்சகன் படம் மற்றும் 2மு, 3மு, 4மு முறையில் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாட்ஷா, வாலி, கில்லி, கஜினி, ஆளவந்தான், தூள், ரன், அலைபாயுதே உள்ளிட்ட பல படங்கள் நூறு நாட்களுக்கும் மேலாக ஓடி ரசிகர்களை மகிழ்வித்தது.

இந்நிலையில், சில காரணங்களுக்காக அம்பிகா திரையரங்க வளாகம் முழுவதும் இடிக்கப்பட்டு, பெரிய வணிக வளாகம் கட்ட முடிவு செய்துள்ளளனர். இடிக்கப்படும் இந்த திரையரங்கம் உள்ள ஒரு லட்சம் சதுரடியில் பெங்களுார் இன்ஜினியரிங்கள் மூலம் சிறப்பு வாய்ந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் கட்ட முடிவு செய்து உள்ளதாகவும், வெகுவிரைவில் திரையரங்கம் மூடப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அம்பிகா தியேட்டர் - மூடப்பட உள்ளதால் ரசிகர்கள் வேதனை
இந்தியாவை ’பாரத்’ என மாற்ற பரப்புரை; 10லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்க ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டம்!

தொடர்ந்து தமிழகத்தில் முக்கியமான திரையரங்குகள் மூடப்பட்டு வருவது திரையரங்குகளுக்கு பொதுமக்களிடம் வரவேற்பு இல்லையா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மதுரை அம்பிகா தியேட்டர் இடிக்கப்பட உள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com