வடிவேல், சிங்கமுத்துpt web
தமிழ்நாடு
“வடிவேலு குறித்து அவதூறாக பேசக்கூடாது” - சிங்கமுத்துவிற்கு நீதிமன்றம் உத்தரவு!
“யூடியூப் சானல்களில் தொடர்ந்து வடிவேலு குறித்து அவதூறாக பேசிவருவதற்காக சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்து இருந்தார். அதன்மீது இன்று தீர்ப்பு வந்துள்ளது.
‘நடிகர் வடிவேலு குறித்து அவதூறாக கருத்து தெரிவிக்க மாட்டேன்’ என உத்தரவாதம் அளிக்க, நடிகர் சிங்கமுத்துவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் “யூடியூப் சானல்களில் தொடர்ந்து வடிவேலு குறித்து அவதூறாக பேசிவருவதற்காக சிங்கமுத்து மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று நடிகர் வடிவேலு வழக்கு தொடர்ந்து இருந்தார். அதன்மீது இன்று தீர்ப்பு வந்துள்ளது.
அதன்படி, சென்னை உயர்நீதிமன்றம் சிங்கமுத்துவிற்கு, “நடிகர் வடிவேலு குறித்து அவதூறாக கருத்து தெரிவிக்கமாட்டேன் என்று உத்தரவாதம் அளிக்கவேண்டும்” என்று உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. இது குறித்து மேலும் தெரிந்து கொள்ள, கீழிருக்கும் காணொளியைப் பார்க்கலாம்.