ஃபகத் ஃபாசில் - ராஷ்மிகா - அல்லு அர்ஜுன்
ஃபகத் ஃபாசில் - ராஷ்மிகா - அல்லு அர்ஜுன்எக்ஸ் தளம்

PUSHPA 2 Review: ஃபர்ஸ்ட் ஹாஃப் ஃபயரு... ஆனா இது...!

முதல் பாகத்தில் அடைந்த உச்சத்தை புஷ்பா இந்த பாகத்தில் தக்க வைத்தாரா? புஷ்பா 2 படம் எப்படி உள்ளது? பார்க்கலாம்...
Published on
PUSHPA 2 Review(2 / 5)

முதல் பாதியில் இருக்கும் புஷ்பாவின் வில்லன்களான ஷெகாவத்தும், மங்களம் சீனுவும் இதிலும் வில்லன்களாக குடைச்சல் தருகிறார்கள். புஷ்பராஜ் தன் கரங்களை அகல விரித்து பார்டர் தாண்டி தன் பிஸினெஸை பெருக்கிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையே புஷ்பாவின் மனைவி ஸ்ரீவள்ளிக்கு திடீரென ஒரு ஆசை உண்டாக, அதை நிறைவேற்ற சில படிகள் ஏறுகிறார் புஷ்பா.

Pushpa 2
Pushpa 2

ஆனால், அங்கு அவருக்கு அவமானமே பரிசாகக் கிடைக்க, நாள் குறித்து காய்களை நகர்த்த ஆரம்பிக்கிறார். ‘முட்டுக்கட்டை போடவே பிறந்தவண்டா’ இந்த ஷெக்காவத் ஒவ்வொரு விஷயத்திலும் முட்டுக்கட்டை போட, அதில் எல்லாம் சாமர்த்தியமாக தப்பிக்கிறார் புஷ்பா. மங்களம் சீனுவின் மனைவியும் தன்னால் முடிந்தமட்டிலும் ஆப்புகளை ஆங்காங்கே விதைத்து அவரே சென்று உட்கார்ந்துகொள்கிறார். இறுதியில், மனைவி ஸ்ரீவள்ளியின் ஆசை ஈடேற, இந்தப் படம் சுபமாய் முடிகிறது.

ஆனால், இந்தக் கதை 2 மணி நேரம்தான் வருவதால், இன்னும் ஒரு மணி நேரத்துக்கு குடும்ப செண்ட்டிமென்ட், சீரியல், குடும்ப மானம் என என்ன என்னவோ இணைத்து 200 நிமிட சினிமாவாக இழு இழுவென இழுத்து முடித்திருக்கிறார் இயக்குநர் சுகுமார்.
ஃபகத் ஃபாசில் - ராஷ்மிகா - அல்லு அர்ஜுன்
மும்பை: மீண்டும் சர்ச்சையில் புஷ்பா 2... தியேட்டரில் ஸ்ப்ரே தெளித்ததால் பதற்றம்!

புஷ்பாவாக அல்லு அர்ஜூனுக்கு இது லைஃப் டைம் வேடம். எப்படி ஆந்திர மக்களுக்கு NTR கிருஷ்ணராக தெரிந்தாரோ, அது போல ஒட்டுமொத்த வட இந்தியாவுக்கும் , இனி அல்லு அர்ஜூன் புஷ்பாவாகவே தெரிவார். அந்த அளவுக்கு அந்த கதாபாத்திரம் வட இந்தியாவில் கொண்டாடப்படுகிறது. தாடியை தடவிக்கொடுக்கும் மேனரிஸம் ஆகட்டும்; ஸ்ரீவள்ளியின் சொல்லுக்கிணங்க சிலவற்றை நிறைவேற்றுவதாகட்டும் பக்கா மாஸ். ரீல்ஸுக்காக அளவெடுத்தது போல் எடுக்கப்பட்டிருக்கும் காட்சிகளில் அல்லு அர்ஜூன் சிறப்பாக நடித்திருக்கிறார்.

Pushpa 2
Pushpa 2

முதல் பாகம் அதன் தலைப்புக்கேற்ப நாயகனின் எழுச்சி சம்பந்தப்பட்டது. இரண்டாவது பாகமும் அதற்கு விதிவிலக்கல்ல. முதல் பாடல் உட்பட சில விஷயங்களை, வட இந்திய மக்களை குறிவைத்து எடுத்திருக்கிறார்கள். அது வொர்கவுட்டும் ஆகியிருக்கிறது. குறிப்பாக மாலத்தீவில் நடக்கும் மரக்கடத்தல் பேரம் சுகுமாரின் ப்யூர் ரைட்டிங். ஆனால், படம் இரண்டாம் பாதியில் மொத்தமாய் விழுந்துவிட்டது.

வெறுமனே ரீல்ஸ் காட்சிகளுக்கு எடுப்பது போல் மாஸ் காட்சிகளை இணைத்திருக்கிறார்கள். பிரசாந்த் நீல் படங்களையும் இந்த ரீல்ஸ் டெம்ப்ளேட்களுக்குள் அடக்கலாம் என்றாலும், அது மையக்கதையை விட்டு விலகாது. நின்று விளையாடும். ஆனால் புஷ்பா 2வில் அது மொத்தமாய் மிஸ்ஸிங். அண்ணன் மகளை வைத்து எழுதப்பட்ட காட்சிகள் மிகவும் மோசமானவை. முதல் பாகத்தில் ஹைலைட்டாக முடியும் புஷ்பா வெர்சஸ் ஷெக்காவத்தையும் இதில் காமெடியாக்கிவிட்டார்கள்.

ஃபகத் என்னும் அசல் திரைமொழிக்கலைஞனை இரண்டாம் பாகத்தில் மொத்தமாய் வீணடித்துவிட்டார்கள்.

ஃபகத் ஃபாசில் - அல்லு அர்ஜூன்
ஃபகத் ஃபாசில் - அல்லு அர்ஜூன்புஷ்பா திரைப்படம்

இந்தப் படத்தின் ஆகப்பெரும் ஊழல் செஞ்சன மரக்கடத்தல் அல்ல. இந்த படத்துக்கு UA சென்சார் சான்றிதழ் என்பதுதான். ராஷ்மிகா மந்தனாவிற்கு முதல் பாதியில் எழுதப்பட்டிருக்கும் எல்லா காட்சிகளுமே விரச உச்சம்தான். அவை வசனங்களாகவும் வந்து விழுகின்றன. போதாக்குறைக்கு அதையே ஒரு பாடலாகவும் வைத்திருக்கிறார்கள். மற்ற மொழிகளை விட தமிழ் டப்பிங்கில் அந்த பாடலில் வரிகள் இன்னும் மோசமாய் எழுதப்பட்டிருக்கிறது.

ஃபகத் ஃபாசில் - ராஷ்மிகா - அல்லு அர்ஜுன்
புஷ்பா - 2 ரிலீஸ்: அல்லு அர்ஜூனை காண கூடிய கூட்டம்... கூட்ட நெரிசலில் சிக்கி பெண் மரணம்!

தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களும், பின்னணி இசையும் புஷ்பா THE RISE-ன் ஆன்மா. அதை அப்படியே இந்தப் பாகத்திலும் செவ்வனே செய்திருக்கிறார். அவர் விட்ட இடங்களை அழகாய் நிரப்பியிருக்கிறார் சாம் CS. அதீத சத்தம் என்றாலும், அது நம் காதுகளை பதம் பார்க்காமல் பார்த்துக்கொள்கிறது ரசூல் பூக்குட்டியின் ஒலிக்கலவை.

Pushpa 2
Pushpa 2

இரண்டாம் பாகத்திற்கென தனியாக கதையென எதையும் யோசிக்காமல், எதையாவது எடுப்போம் வாருங்கள் என்கிற மென்டாலிட்டியே புஷ்பா 2வில் மிஞ்சுகிறது. இதில் மூன்றாவது பாகத்திற்கு வேறு லீடு வைக்கிறார்கள்.

புஷ்பான்னா ஃபயர் என கம்பீரமாக சுத்திக்கொண்டிருந்தவரை தரதரவென இழுத்து காமெடியனாக்கி வைத்திருக்கிறார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com