\
அமைச்சர் செங்கோட்டையன்
அமைச்சர் செங்கோட்டையன்pt

அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் வழக்கு தள்ளுபடி.. சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

அமைச்சர் செங்கோட்டையன் தேர்தலில் வெற்றிபெற்றதற்கு எதிரான வழக்கு தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது..
Published on
Summary

கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் பிரபு தாக்கல் செய்த தேர்தல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனின் கோபிசெட்டிப்பாளையம் தொகுதி வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் பிரபு தாக்கல் செய்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மனுவில், செங்கோட்டையனுக்கு சான்றளித்த நோட்டரி வழக்கறிஞரின் உரிமம் காலாவதியாகிவிட்டதாகக் கூறப்பட்டிருந்தது. நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், அமைச்சர் செங்கோட்டையனுக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.

அமைச்சர் செங்கோட்டையன்
'வட மாநிலங்களிலும் விஜய்யின் தாக்கம் உள்ளது' - அமைச்சர் செங்கோட்டையன்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com