மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி

மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி

மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிரான மனு தள்ளுபடி
Published on

சென்னை மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. 

உலகிலேயே 2-வது நீளமான கடற்கரை, சென்னை மெரினா ஆகும். இங்கு அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு நினைவிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமைப்பதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். டிராபிக் ராமசாமி, வழக்கறிஞர் எஸ்.துரைசாமி ஆகியோரும் எதிர்ப்பு தெரிவித்து தனித்தனியாக வழக்குத் தொடந்தனர். 

வழக்கறிஞர் துரைசாமி தாக்கல் செய்துள்ள மனுவின் விசாரணையின் போது தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ‘மெரினா கடற்கரையை பாதுகாக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு. கடற்கரை ஒழுங்குமுறை மண்டலப் பகுதிகளில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் அமையக் கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அண்ணாநகரைச் சேர்ந்த வழக்கறிஞர் காந்திமதி என்பவர் மெரினாவில் நினைவிடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பொதுநல வழக்குத் தொடர்ந்திருந்தார். அதில், ‘மக்கள் நடமாட்டம் உள்ள மெரினா வில் உடல்களைப் புதைப்பது பொதுமக்களுக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. உடல்களைப் புதைப்பதற்கும், எரிப்பதற்கும் மாநகராட்சி சட்டவிதிகளின்படி, சென்னை மாநகராட்சி கமிஷனர் தான் அனுமதி வழங்கவேண்டும். ஏற்கெனவே, மெரினா கடற்கரையில் அண்ணாதுரை, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரது உடலைப் புதைத்து நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லோரும் மறையும் போது முதல்வராக இருந்தவர்கள். எனவே அங்கு வேறு யாராவது உடலை அடக்கம் செய்ய மாநகராட்சி கமிஷனர் அனுமதி வழங்கினால், கடற்கரையில் உள்ள சுற்றுச்சூழலை அது அழித்து விடும். எனவே, அதற்கு விதிமுறைகளை உருவாக்கும்படி தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் ஆகியோருக்கு கடந்த ஜூலை 30-ம் தேதி மனு அனுப்பினேன்.இதுவரை பதில் இல்லை’ என்று கூறியிருந்தார்.

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அமர்வில் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டு இருந்தது. வழக்கு விசாரணை தொடங்கும் முன் வழக்கறிஞர் காந்திமதி ஆஜராகி, சில காரணங்களுக்காக இந்த மனுவை வாபஸ் பெறுவ தாகவும், அதற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றார். அதை ஏற்ற நீதிபதிகள், வாபஸ் பெற அனுமதித்து வழக்கைத் தள்ளுபடி செய்த னர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com