வழிவிடாததால் தட்டிக்கேட்ட சக ஆட்டோ ஓட்டுநர்; முன்விரோதம் காரணமாக ஆட்டோவுக்கு தீ வைத்து லாரி டிரைவர்!

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முன்னாள் சென்ற ஆட்டோவிற்கு வழி விடாததால் ஏற்பட்ட தகராறை தட்டிக்கேட்ட சக ஆட்டோ ஓட்டுநரின் ஆட்டோவை தீ வைத்து எரித்த லாரி ஓட்டுநர் கைது. போலீசார் விசாரணை.
கொளுத்தப்பட்ட ஆட்டோ
கொளுத்தப்பட்ட ஆட்டோபுதியதலைமுறை

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த மெக்கானிக் ராமலிங்கம் என்பவருக்கு சொந்தமான ஆட்டோவை, சீர்காழி அருகே குளங்கரை கிராமத்தை சேர்ந்த வினோத் என்பவர் வாடகைக்கு ஓட்டி வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் வினோத் ஆட்டோவில் சென்றபோது இவருக்கு முன்னாள் சென்ற ஆட்டோவிற்கு எதிரே வந்த லாரி வழிவிடாததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிக்கபடுவதை அறிந்த ஆட்டோ ஓட்டுநர் வினோத், பாதிக்கப்பட்ட சக ஆட்டோ ஓட்டுநர் மற்றும் லாரி ஓட்டுநரிடையே சமாதானம் செய்ய முயன்றார்.

கொளுத்தப்பட்ட ஆட்டோ
‘அடிமைத்தனத்தை முழுவதுமாக வேரறுக்க வேண்டும்’ - பிரதமர் மோடி உரை

இதில், அந்த லாரியில் வந்த மற்றொரு ஓட்டுநர் ராமுவுக்கும் வினோத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்ட பின்னர் கலைந்து சென்றனர். இந்நிலையில், இன்று வினோத் தனது ஆட்டோவை திட்டை ரோடு சந்திப்பில் நிறுத்திவிட்டு, அருகில் உள்ள டீ கடைக்கு சென்று டீ குடித்துக்கொண்டிருந்தார். அப்பொழுது, முன்விரோதம் காரணமாக சீர்காழி அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த லாரி டிரைவர் ராமு, நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார்.

இதில், தீ மளமளவென ஆட்டோ முழுவதும் பற்றி எரிந்த நிலையில், அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதனால் அந்தபகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்த தகவல் அறிந்த சீர்காழி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீ விபத்துக்குள்ளான ஆட்டோவை மீட்டதுடன் ஆட்டோவுக்கு தீ வைத்துவிட்டு அங்கேயே நின்ற லாரி டிரைவர் ராமுவையும் கைது செய்தனர்.

கொளுத்தப்பட்ட ஆட்டோ
பெற்றோர்களே உஷார்! உணவு சாப்பிட பயந்து 1 வருடமாக சாப்பிடாமல் இருக்கும் 3 வயது சிறுவன்! என்ன நடந்தது?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com