BJP canditate list
BJP canditate listPT Web

மொத்தமாக களத்தில் இறங்கிய பாஜக தலைவர்கள்! யார் யார் போட்டி..எந்தெந்த தொகுதி.. வெற்றிவாய்ப்பு எப்படி?

தமிழகத்தில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிடும் 9 பேர் கொண்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
Published on

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் 9 பேர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, கோயம்புத்தூரில் போட்டியிடுகிறார். தென்சென்னையில் தமிழிசை சௌந்தரராஜனும், மத்திய சென்னையில் வினோத் பி.செல்வமும், வேலூரில் ஏ.சி.சண்முகமும் (கூட்டணி), கிருஷ்ணகிரியில் நரசிம்மனும், நீலகிரியில் எல்.முருகனும், பெரம்பலூரில் பாரிவேந்தரும் (கூட்டணி), நெல்லையில் நைனார் நாகேந்திரனும், கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனும் போட்டியிட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர்களுடைய வெற்றி நிலவரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் சொல்லும் கருத்துகளை இந்த வீடியோவில் பார்க்கவும்.

BJP canditate list
ஓபிஎஸ்க்கு அல்வா கொடுத்த அண்ணாமலை! ஒரு சீட் கூட இல்லை; முடிவுக்குவந்தது பாஜக கூட்டணி தொகுதி பங்கீடு!

பாஜக வேட்பாளர் பட்டியல் குறித்தும், அவர்களுடைய வெற்றி நிலவரம் குறித்து மூத்த பத்திரிகையாளர் பா.கி சொல்லும் கருத்துகளை இந்த வீடியோவில் பார்க்கவும்.

இந்நிலையில், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. பாமக உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்குமான தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில், ராமநாதபுரம் தொகுதியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு சார்பில் ஓபிஎஸ் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com