“மோடியின் தூக்கத்தை INDIA கூட்டணி கலைத்துள்ளது” - பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று (மார்ச் 23) திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
வேட்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின்
வேட்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின்புதிய தலைமுறை

நாடு முழுவதும் ஜனநாயக திருவிழா சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அனைத்துக்கும் மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. 7 கட்டங்களாக நடைபெற இருக்கும் இந்தத் தேர்தலில், தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி அனைத்துத் தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்காக அனைத்துக் கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (மார்ச் 22) தனது சூறாவளி தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று (மார்ச் 23) திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரியில் உரையாற்றினார். முன்னதாக, நாகை, தஞ்சாவூர் தொகுதி மக்களவை வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.

வேட்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின்
தஞ்சை | சாலையோர கடையில் சுடச்சுட காஃபி... தீவிர தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பின்னர் பேசிய அவர், “நாட்டில் ஜனநாயகம் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது. இந்தியாவில் உள்ள எல்லா கட்டமைப்புகளையும் பாஜக அரசு சிதைத்துவிட்டது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பன்முகத்தன்மை, கூட்டாட்சி தத்துவம் இருக்காது. நாட்டில் மாநிலங்களும் இருக்காது. அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை அழிக்க முயல்கிறார்.

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் எதிர்க்கட்சியினரை கைது செய்யும் நடவடிக்கை நடக்கிறது” எனப் பேசினார். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துகளை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் பார்க்கலாம்.

இதையும் படிக்க: குஜராத்: காங்கிரஸைத் தொடர்ந்து அடுத்தடுத்து விலகும் பாஜக வேட்பாளர்கள்.. காரணம் என்ன?

வேட்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின்
“காவல் உதவி ஆணையர் என்னிடம் அத்துமீறி நடந்துக்கொள்கிறார்” - அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு புகார்!

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com