திருச்சி மக்களே... உங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ்!

சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வரும் 16ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி
திருச்சிமுகநூல்

சமயபுரம் மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி வரும் 16ஆம் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிவிப்பில், “சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் தேர் திருவிழா வரும் 16ஆம் தேதி நடைபெறுவதால் அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை விடப்படுகிறது” எனக் கூறியுள்ளார்.

samayapuram mariamman temple
samayapuram mariamman templefile

திருச்சியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தும் என்றும், ஆயினும் தேர்வுகள் நடைபெறும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி
"ஆணுறை பெட்டிகள் வைக்க வேண்டாம்" - ஆட்சியரிடம் மனு அளித்த திருநங்கைகள் - என்ன காரணம் தெரியுமா?

அதேபோல் நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com