"ஆணுறை பெட்டிகள் வைக்க வேண்டாம்" - ஆட்சியரிடம் மனு அளித்த திருநங்கைகள் - என்ன காரணம் தெரியுமா?

உலகப் புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவின் போது அந்த பகுதியில் ஆணுறை பெட்டி வைக்கத் தடை விதிக்கக்கோரி திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மனு அளித்த திருநங்கைகள்
மனு அளித்த திருநங்கைகள்PT WEB

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் ஒரு சில தொண்டு நிறுவனங்கள் திருவிழாவிற்குச் செல்லும் வழியில் கோயிலுக்கு மிக அருகாமையில் ஆணுறை பெட்டி வைப்பது வழக்கம்.

ஆணுறை பெட்டிகள் வைக்க வேண்டாம்!

இந்தநிலையில், இங்கு ஆணுறை பெட்டிகள் வைப்பதைத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில், "கோயில் திருவிழாவில் ஆணுறை பெட்டி வைப்பது என்பது ஒட்டுமொத்த தமிழகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்துகிறது. பிரசித்தி பெற்ற இந்த கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் உலகம் முழுவதும் இருந்து ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் எனப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்களுடைய முழு நோக்கமும் கூவாகம் கூத்தாண்டவர் வழிபட்டால் நாமும் நம் குடும்பமும் நல்ல நிலையில் இருக்கும் என்பது தான். மிகப்பெரிய நம்பிக்கை உடன் வந்து கூத்தாண்டவரை வழிபட்டு நேர்த்திக்கடன் செலுத்தி விட்டுச் செல்கின்றனர்.

மனு அளித்த திருநங்கைகள்
"50 சவரன் பத்தாதுனு இன்னும் கேட்குறாங்க; கணவரை பார்க்க விட மாட்டிங்கிறாங்க"-நிறைமாத கர்ப்பிணி வேதனை!

மக்களின் நம்பிக்கை தெய்வம் கூவாகம் கூத்தாண்டவர் 

மக்கள் நம்பிக்கையாக இருக்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு வருடமும் உலகப் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் சித்திரைத் திருவிழா முடிந்த பிறகு அந்த கிராமத்தில் கிடக்கும் ஆணுறையைக் குழந்தைகள் எடுத்து விளையாடுவதும், பொதுமக்கள் அதைப் பார்த்து கூச்சத்துடனும் செல்லும் நிலை நீடித்து வருகிறது.

ஆணுறை பெட்டி வைக்கத் தடை விதிக்க வேண்டும்

உலகப் பிரசித்தி பெற்ற இந்த கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் வெளி மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமானோர், சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என்பதால் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் அருகாமையில் ஆணுறை பெட்டி வைக்கத் தடை விதிக்க வேண்டும்" எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் கூறியதாகத் திருநங்கைகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com