தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக கேள்வி - பதில் நேரலை

தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக கேள்வி - பதில் நேரலை
தமிழக சட்டப்பேரவையில் முதன்முறையாக கேள்வி - பதில் நேரலை

தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக கேள்வி - பதில் நேரம் நேரலையக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

அதில் முதல் கேள்வியாக பல்லாவரம் தொகுதி திமுக எம்.எல்.ஏ கருணாநிதி, மெட்ரோ ரயில் சேவை விமான நிலையத்தில் இருந்து வண்டலூர் வரை நீட்டிக்கப்படுமா எனக் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த முதல்வர், மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க விரிவான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் உள்ளது என்று தெரிவித்தார்.

ஒட்டப்பிடாரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவக்க அரசு முன்வருமா? என எம்.சி.சண்முகையா எழுப்பிய கேள்விக்கு, ஒட்டப்பிடாரத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைக்க தற்போது அவசியம் ஏற்படவில்லை என அமைச்சர் பொன்முடி பதிலளித்தார்.

ஒசூரை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைப்பது குறித்து முதலமைச்சர் உரிய முடிவெடுப்பார் என்றும், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை வருவாய் மாவட்டமாக உருவாக்க வேண்டும் என பொள்ளாச்சி எம்எல்ஏ ஜெயராமன் கூறியதற்கு, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளை வருவாய் மாவட்டமாக்குவது பற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

கடையத்தை தனி தாலுகாவாக உருவாக்க ஆலங்குளம் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் கோரிக்கை விடுத்தார். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும் கேள்விகளை முன்வைத்தனர். அதிராம்பட்டினம் பேரூராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வருமா? என கா.அண்ணாதுரை கேள்வி எழுப்பினார். பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.

திருவண்ணாமலை வெறையூரில் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி துவக்க அரசு முன்வருமா? என கு.பிச்சாண்டி கேள்வி எழுப்பினார். நாகை மாலியின் கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்தார். க.அண்ணாதுரை எம்.எல்.ஏ.வின் கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com