மயிலாடுதுறை, அரியலூர், இப்போ பாபநாசம்? சிறுத்தைப்புலி நடமாட்டத்தால் வனத்துறை குழப்பம்!

சிறுத்தைப்புலியை பிடிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிசிடிவி காட்சியில் பதிவான சிறுத்தைப்புலி நடமாட்டம்
சிசிடிவி காட்சியில் பதிவான சிறுத்தைப்புலி நடமாட்டம்புதிய தலைமுறை

செய்தியாளர் - விவேக்ராஜ்

மயிலாடுதுறை மற்றும் அரியலூரில் தென்பட்ட சிறுத்தைப்புலி தற்போது தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தில் தலையை காட்டியுள்ளது. சிறுத்தைப்புலியை பிடிக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சியில் பதிவான சிறுத்தைப்புலி நடமாட்டம்
சிசிடிவி காட்சியில் பதிவான சிறுத்தைப்புலி நடமாட்டம்

மயிலாடுதுறை நகர்ப்பகுதியில் தென்பட்ட சிறுத்தைப்புலி, நீர்நிலைகளை ஒட்டிய பகுதிகளை நோக்கி இடம்பெயர்ந்து வருகிறது. தொடர்ந்து அரியலூர் மாவட்டத்திலும் சிறுத்தைப் புலியின் நடமாட்டம் தெரிந்ததாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சிசிடிவி காட்சியில் பதிவான சிறுத்தைப்புலி நடமாட்டம்
அறைக்குள் அமைதியாய் நுழைந்த சிறுத்தை.. சத்தமில்லாமல் சிறுவன் செய்த அசாத்திய செயல் - வீடியோ!

இந்நிலையில், தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உடப்பாங்கரை கிராமத்தை சேர்ந்த விவசாயி ஐய்யப்பன் என்பவர் தனது நிலத்தில் சிறுத்தைப்புலியை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக கூறியுள்ளார். தென்னை மரத்தின் மீது ஏறி தான் தப்பித்ததாகவும், வயலில் இருந்து சிறுத்தைப்புலி சென்றபிறகு அதனை ஊர்மக்களிடம் தெரிவித்ததாகவும் விவசாயி ஐயப்பன் கூறியுள்ளார்.

சிறுத்தை கால் தடம்
சிறுத்தை கால் தடம்

இதையடுத்து சம்பவ இடத்தில் வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து புளியம்பாடி, கூனஞ்சேரி, உமையாள்புரம் உள்ளிட்ட கிராமங்களில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என தண்டோரா மூலமும், வாட்ஸ் ஆப் மூலமும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சியில் பதிவான சிறுத்தைப்புலி நடமாட்டம்
இரவு 10 மணிக்கு மேல் பரப்புரை... பாஜக வேட்பாளர் அண்ணாமலை வாகனத்தை வழிமறித்த காவல்துறை!

மயிலாடுதுறையில் நடமாடிய சிறுத்தை அரியலூர் மாவட்டம் செந்துறைக்கு இடம்பெயர்ந்ததாக தஞ்சை மாவட்ட வனத்துறை சார்பில் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், பாபநாசம் பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளது தஞ்சை மாவட்ட வனத்துறையினருக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அதேநேரம், சிறுத்தைப்புலி குறித்து வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com