அறைக்குள் அமைதியாய் நுழைந்த சிறுத்தை.. சத்தமில்லாமல் சிறுவன் செய்த அசாத்திய செயல் - வீடியோ!

மகாராஷ்டிராவில் அறைக்குள் நுழைந்த சிறுத்தையை, அமைதியாய்ப் பூட்டிவிட்டுத் தப்பித்துச் சென்ற சிறுவனின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அறைக்குள் நுழையும் சிறுத்தை
அறைக்குள் நுழையும் சிறுத்தைட்விட்டர்

காட்டு விலங்குகள் - மனிதர்கள் இடையேயான மோதல் என்பது சமீபகாலமாக நடந்த வண்ணம் உள்ளன. விலங்குகள் வாழ்ந்த காடுகளை மனிதர்கள் ஆக்கிரமித்ததே இதுபோன்ற சம்பவங்களுக்கு காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சொல்வதுண்டு. யானைகள் விவசாய நிலங்களுக்குள் புகுவது, மனிதர்களை தாக்குவது, சிறுத்தைகள் மனிதர்கள் வாழும் இடங்களுக்குள் உலாவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அவ்வவ்போது வைரலாகி வருகின்றன. அந்த வகையில் சிறுத்தை ஒன்று திருமண மண்டபத்திற்குள் புகுந்த வீடியோ வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் திருமண மண்டத்தின் அறைக்குள் புகுந்த சிறுத்தையை, சிறுவன் கதவை மூடிவிட்டுப் பாதுகாப்பாய்த் தப்பிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் இந்த சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. திருமண மண்டபத்தின் அறைக்குள் 12 வயது சிறுவன் ஒருவன் கைப்பேசியில் கேம் விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது சிறுத்தை ஒன்று அந்த அறைக்குள் நுழைகிறது. இதைப் பார்த்த அந்தச் சிறுவன் துளியும் பயப்படாமல், சிறுத்தை நுழைந்தபிறகு வெளியே கடகடவென்ற சென்று அறைக் கதவை மூடிவிட்டு செல்கிறார்.

இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பின்னர் சிறுவன் சத்தம் போட்டதால், அப்பகுதி மக்கள் விரைந்து வந்து வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அப்பகுதி போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சிறுத்தையை மடக்கி பிடித்துச் சென்றனர்.

விலங்குகளைக் கண்டாலே பெரிய மனிதர்களே, பதறியடித்துக் கொண்டு ஓடும் சூழ்நிலையில், தைரியத்துடனும் அதேநேரத்தில் புத்துசாலிதனமாகவும் செயல்பட்ட சிறுவனை எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com