குஷ்பு
குஷ்புகோப்புப்படம்

அமைச்சர் ரோஜா குறித்து அவதூறு: “பண்டாரு சத்தியநாராயண மூர்த்தி மன்னிப்பு கேட்க வேண்டும்” - குஷ்பு

அமைச்சர் ரோஜாவை விமர்சனம் செய்த பண்டாரு சத்தியநாராயண மூர்த்திக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் நடிகையுமான குஷ்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
Published on

பாஜக நிர்வாகியும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு, ஆந்திர அமைச்சர் ரோஜாவுக்கு தன் ஆதரவை இன்று தெரிவித்துள்ளார். முன்னதாக அமைச்சர் ரோஜா குறித்து தெலுங்கு தேச கட்சியினர் பல அவதூறு கருத்துகளை பதிவுசெய்தனர். அதற்கு ரோஜா தன் தரப்பில் கண்டனத்தை பதிவுசெய்து பதிலளித்தார்.

குஷ்பு
“இது வெறும் ட்ரெய்லர்தான்; ஒரிஜினல் படத்தையும் வெளியிடுவோம்”- அமைச்சர் ரோஜா குறித்து சர்ச்சை பேச்சு!
minister roja
minister rojapt desk

இந்நிலையில் இதுகுறித்து குஷ்பு இன்று தெரிவித்துள்ள கருத்தில், “பெண் அமைச்சர் குறித்த பண்டாருவின் கருத்துகள் அவரின் பாதுகாப்பு மற்றும் சீரழிவுக்கு வழிவகுக்கும். பண்டாரு ஒரு மனிதனாக தோன்றி விட்டார். அவர், அமைச்சர் ரோஜாவிடம் உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

பிரதமர் மோடி மகளிருக்கு பல்வேறு இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தாலும், பண்டாரு போன்றவர்கள் இதுபோன்ற நேரத்தில் பெண்களுக்கு எதிராக அவர்களை இழிவுபடுத்தி பேசுவது மிகவும் கண்டனத்துக்குரியது.

பெண்களை மதிப்பவர்கள் இதுபோன்று பேச மாட்டார்கள். பெண்களை துஷ்பிரயோகம் செய்வது தனது பிறப்புரிமை என்று பண்டாரு நினைக்கிறாரா என தெரியவில்லை. நாட்டில் பெண்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும்.

விவாதத்தின் போதுகூட ஒரு பெண்ணை இவ்வளவு அநாகரிகமாக பேசுவது மிகவும் கண்டிக்கக் கூடியது. ஆகவே பண்டாரு உடனடியாக அமைச்சர் ரோஜாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கும் வரை போராடுவேன்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com