“இது வெறும் ட்ரெய்லர்தான்; ஒரிஜினல் படத்தையும் வெளியிடுவோம்”- அமைச்சர் ரோஜா குறித்து சர்ச்சை பேச்சு!

ஆந்திர அமைச்சர் ரோஜா ஆபாச படத்தில் நடித்ததாக கூறிய தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், மீண்டும் சர்சையை கிளப்பியுள்ளார் அக்கட்சியின் மாநில மகளிரணி தலைவி மங்களமுடி அனிதா

1999-ல் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து நடிகை ரோஜா, இரண்டு முறை தேர்தலில் நின்று தோல்வியை சந்தித்த நிலையில், 2014-ல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதையடுத்து தற்போது சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

minister roja
minister rojapt desk

இந்நிலையில் சந்திரபாபு நாயுடு குறித்து விமர்சனம் செய்த அமைச்சர் ரோஜாவை, தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவர் பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார். ரோஜா ஆபாச படங்களில் நடித்ததாகவும் அதன் வீடியோ தன்னிடம் இருப்பதாகவும் கூறிய அவர், சந்திரபாபுவை விமர்சிப்பதை நிறுத்தாவிட்டால், வீடியோவை வெளியிடுவேன் என்றும் சர்ச்சையை கிளப்பியிருந்தார்.

அமைச்சர் ரோஜா பேட்டி

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரோஜா தனது கண்டனத்தை தெரிவித்து கண்ணீர் விட்டு அழுதார். அப்போது, அவர் பேசுகையில், “நான் நிர்வாண படத்தில் நடித்ததாக தெரிவித்து சித்ரவதை செய்து வருகிறார்கள். எனது குணத்தை மதிப்பிடுவதற்கு நீங்கள் யார்? தெலுங்கு தேசம் கட்சியினர் பெண்களை விளையாட்டுப் பொருளாக பயன்படுத்தி வருகிறார்கள். அவர்களின் மீது நான் மானநஷ்ட வழக்கு தொடுக்கவுள்ளேன். அரசியலை இவ்வளவு கீழ்த்தரமாக பேசி பயன்படுத்துகிறார்கள்” என்று தெரிவித்தார்.

அனிதா vs ரோஜா
ரஜினியின் பேச்சை கண்டித்தது ஏன்? அமைச்சர் ரோஜா விளக்கம்
தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகளிரணி தலைவி மங்களமுடி அனிதா
தெலுங்கு தேசம் கட்சியின் மாநில மகளிரணி தலைவி மங்களமுடி அனிதாpt desk

இதைத் தொடர்ந்து பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி கைது செய்யப்பட்ட நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அக்கட்சியின் மாநில மகளிரணி தலைவி மங்களமுடி அனிதா, “ரோஜாவின் ட்ரெய்லர்தான் வெளியாகியுள்ளது. எதிர்காலத்தில் ஒரிஜினலை வெளியிடுவோம்” என்று அறிவித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com