கிருஷ்ணகிரி: அடுத்தடுத்து பிறந்த பெண் குழந்தைகள் - தந்தையால் பச்சிளம் குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்

கெலமங்கலம் அருகே பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை கொலை செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
Accused
Accusedpt desk

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள ஜெக்கேரி இருளர் காலனியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி மாதையன் (46). இவரை இவரது முதல் மனைவி பிரிந்து சென்ற நிலையில், சின்னம்மா (38) என்பவரை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இத்தம்பதிக்கு 12 வயதில் மகனும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். மீண்டும் கர்ப்பமாக இருந்த சின்னம்மாவிற்கு கடந்த 14 நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது.

Police investigation
Police investigationpt desk

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை தனது மனைவி சின்னம்மாவிடம் பெண் குழந்தையை கொன்று விடலாம் என மாதையன் கூறியுள்ளார். இதற்கு சின்னம்மா மறுப்பு தெரிவித்தால் மனைவியை திட்டித் தள்ளிவிட்டு குழந்தையை தூக்கிக் கொண்டு மாதையன் வெளியே ஓடியுள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சின்னம்மா, மாதையனை தேடியுள்ளார். ஆனால் அதற்குள் மாதையன் தனது வீட்டின் அருகே உள்ள பாறையில் குழந்தையை போட்டு விட்டு தப்பியோடியுள்ளார்.

Accused
கர்நாடகா: ரேணுகாசாமி கொலை வழக்கு - விசாரணையில் அடுத்தடுத்து வெளியாகும் அதிர்ச்சி தகவல்கள்

இதை கவனித்த சின்னம்மா பாறை மீது சென்று பார்த்த போது அங்கு குழந்தை பேச்சு, மூச்சின்றி கிடந்துள்ளது. கன்னத்தில் காயங்கள் இருந்துள்ளன. பின்னர் அந்த குழந்தையை எடுத்துக் கொண்டு கெலமங்கலம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளார் மாதையன். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் ஏற்கெனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

கெலமங்கலம் போலீசார்
கெலமங்கலம் போலீசார்pt desk

இதுகுறித்து கெலமங்கலம் போலீசாருக்கு தகவல் வந்ததை அடுத்து குழந்தையை தந்தை மாதையன் அடித்துக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் கொலை வழக்குப்பதிவு செய்த கெலமங்கலம் போலீசார், மாதையனை நேற்றிரவு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்

Accused
திருவள்ளூர்: வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com