திருவள்ளூர்: வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழப்பு
செய்தியாளர்: எழில்
சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் அருண் - துர்கா தம்பதியர். இந்த தம்பதியினர் தங்களது ஒன்றரை வயது மகள் கிருத்திகாவை அழைத்துக் கொண்டு, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த துராபள்ளம் பகுதியில் உள்ள துர்காவின் தாய் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது இவர்களது குழந்தை வீட்டின் பின்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தது.
அப்போது, அங்குள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்ததாக தெரிகிறது. உடனடியாக தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தையை மீட்ட உறவினர்கள், சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரவித்தனர்.
இதனையடுத்து உடற்கூறு ஆய்வுக்காக குழந்தையின் சடலத்தை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆரம்பாக்கம் காவல்துறையினர் வாக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.