\
மகனை கொன்ற தந்தை
மகனை கொன்ற தந்தைபுதியதலைமுறை

கிருஷ்ணகிரி | 6 வயது மகனை கொலை செய்த தந்தை... மனைவியையும் கொன்றதாக அதிர்ச்சி வாக்குமூலம்!

சூளகிரி அருகே கடுகானப்பள்ளி கிராமத்தில் குடிபோதையில் தனது 6 வயது மகனின் கழுத்தில் கால் வைத்து கொன்ற தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர்.
Published on

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடுகானப்பள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் சந்தோஷ். இவர் மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார். இந்நிலையில் இவர், குடிபோதையில் தற்போது தனது 6 வயது மகன் செந்தில் செல்வனின் கழுத்தில் கால் வைத்து மோசமாக கொலை செய்துள்ளார்.

தகவலறிந்து சென்ற அக்கம் பக்கத்தினர், உடனடியாக சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், குழந்தையின் உடலை மீட்டு சூளகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அப்போது அங்கு போலீசாரின் கட்டுப்பாட்டில் இருந்த சந்தோஷ் கொடுத்த வாக்குமூலத்தில், “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எனது மனைவி கிணற்றில் தவறி விழுந்து இறக்கவில்லை. நான்தான் அவரை கொன்று கிணற்றில் வீசினேன்” என்றுள்ளார். இதனால் அப்பகுதியில் பரபரப்பான் சூழல் ஏற்பட்டது.

உடனடியாக சந்தோஷை கைது செய்த போலீசார், அவரை காவல் நிலையத்திக்கு அழைத்து சென்றனர். பெற்ற மகனை தந்தையே கொன்ற சம்பவம் சூளகிரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகனை கொன்ற தந்தை
70 வயது மூதாட்டியை கொன்றுவிட்டு 5 சவரன் தங்க நகையை திருடிய தம்பதி.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com