krishnagiri assembly constituency updates
krishnagirix page

தொகுதி அலசல் | பன்மொழி பேசும் மக்களின் சங்கமம்.. கிருஷ்ணகிரி ஓர் விரிவான பார்வை!

பன்மொழி பேசும் மக்களின் சங்கமமாக அறியப்படுகிறது கிருஷ்ணகிரி மாவட்டம். இந்த மாவட்டத்தின் தேர்தல் வரலாற்றையும், வெற்றியைத் தீர்மானிக்கும் சமூகக் காரணிகளையும் பார்க்கலாம்..
Published on

ஊத்தங்கரை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிமுகவின் அசைக்க முடியாத கோட்டையாகத் திகழ்கிறது ஊத்தங்கரை தனித்தொகுதி. 2011-இல் உருவானது முதல் இங்கு இரட்டை இலைக்கே வெற்றி கிடைத்து வருகிறது. பட்டியல் இன் சமூக வாக்குகளே இங்கு வெற்றியின் அச்சாணியாக உள்ளன. தற்போது அதிமுகவின் தமிழ்செல்வம் இங்கு எம்.எல்.ஏ-வாக உள்ளார்.

அதிமுக
அதிமுகpt web

பர்கூர்

அடுத்ததாக, நட்சத்திர அந்தஸ்து கொண்ட பர்கூரை பார்க்கலாம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெற்றியையும், தோல்வியையும் சந்தித்த வரலாற்றுத் தொகுதி இது. வன்னியர் சமூக மக்கள் பெரும்பான்மையாக உள்ள இத்தொகுதியில், தற்போது திமுகவின் மதியழகன் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

ஓசூர்

தொழில் நகரமான ஓசூர், பன்மொழி பேசும் மக்களின் புகலிடம். ஒருகாலத்தில் காங்கிரஸின் பிடியில் இருந்த இந்தத் தொகுதி, இப்போது திமுக - அதிமுக இடையிலான நேரடிப் போர்க்களமாக மாறியுள்ளது. திமுகவின் பிரகாஷ் இங்கு சட்டமன்ற பிரதிநிதியாக உள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில்தான், திமுக இங்கு முதன்முறையாக வெற்றி பெற்றது.

krishnagiri assembly constituency updates
தொகுதி அலசல் | சோழர் காலம் முதல் இன்றைய தேர்தல் வரை.. விழுப்புரம் ஓர் விரிவான பார்வை!

தளி

எல்லையோரத் தொகுதியான தளி, திராவிட அரசியலுக்கு நடுவே இன்றும் சிபிஐ கோட்டையாக நீடிக்கிறது. ராமச்சந்திரன் மூன்றாவது முறையாக இந்தத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

கிருஷ்ணகிரி

மாவட்டத் தலைநகரான கிருஷ்ணகிரியில், வன்னியர் வாக்குகளைக் கவரும் கட்சிக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற நிலை உள்ளது. கடந்த ஐந்து தேர்தல்களில் அதிமுக இங்கு தனது செல்வாக்கை அதிகரித்து வருகிறது. அசோக் குமார் தற்போது இத்தொகுதியின் எம்.எல்.ஏ-வாக உள்ளார்.

திமுக - அதிமுக
திமுக - அதிமுகX

வேப்பனஹள்ளி

திமுகவின் வசம் இருந்த வேப்பனஹள்ளி தொகுதியை, கடந்த தேர்தலில் அதிமுகவின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி கைப்பற்றினார். இது கிருஷ்ணகிரி மாவட்ட அரசியலில் ஒரு முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால், வன்னியர் மற்றும் ஆதிதிராவிடர் சமூக வாக்குகளே கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 'வின்னிங் கார்டு' ஆக உள்ளது.

அதேசமயம் ஓசூர், தளி போன்ற தொகுதிகளில் மொழிச் சிறுபான்மையினரின் ஆதரவு வெற்றியைத் தீர்மானிக்கிறது. 2026-இல் இந்தச் சமநிலை நீடிக்குமா அல்லது புதிய மாற்றங்கள் நிகழுமா என்பதை காண சில வாரங்கள் பொறுத்திருப்போம்.

krishnagiri assembly constituency updates
மயிலாடுதுறை தொகுதி | மும்முனைப் போட்டி.. முந்தப்போவது யார்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com