வணிகர் தினம்: மூடப்பட்ட மொத்த விற்பனை கடைகள்... வெறிச்சோடிய கோயம்பேடு மார்க்கெட்

வணிகர் தினம்: மூடப்பட்ட மொத்த விற்பனை கடைகள்... வெறிச்சோடிய கோயம்பேடு மார்க்கெட்
வணிகர் தினம்: மூடப்பட்ட மொத்த விற்பனை கடைகள்... வெறிச்சோடிய கோயம்பேடு மார்க்கெட்

வணிகர் தினத்தை முன்னிட்டு மொத்த விற்பனை கடைகள் மூடப்பட்டதால் வெறிச்சோடி காணப்படுகிறது கோயம்பேடு சந்தை.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மே 5 ஆம் தேதி வணிகர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வணிகர் தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள காய்கறி கடைகள், மளிகை கடைகள் மூடப்படும் என வணிகர்கள் சங்கம் சார்பாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சென்னை கோயம்பேடு சந்தையில் வணிகர் தினத்தை முன்னிட்டு மொத்த விற்பனை கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் கோயம்பேடு சந்தை வெறிச்சோடி காணப்படாது. இருப்பினும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்கும் வகையில் சென்னை கோயம்பேடு சந்தையில் உள்ள காய்கறி, பழம் சில்லறை விற்பனை கடைகள் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. நாளை முகூர்த்த நாள் என்பதால் பூ மார்கெட் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது.

இதுகுறித்து புதிய தலைமுறையிடையே பேசிய சில்லறை வியாபாரி சுரேஷ், “மொத்த கடைகள் மூடப்பட்டாலும் சில்லறை கடைகள் தொடர்ச்சியாக செயல்பட்டு வருகிறது. இருப்பினும் இன்று விடுமுறை என கருதி மக்கள் வராத காரணத்தினால், வியாபாரம் மந்தமாக இருக்கின்றது” என்றார். தக்காளி விலை உயர்வு குறித்து அவர் பேசுகையில், “கோடைக்காலம் என்பதால் கோயம்பேடு சந்தைக்கு குறைந்த அளவில் மட்டுமே தக்காளி வருகிறது. அதனால் தக்காளி விலை மட்டுமே உயர்ந்து வருகிறது. மற்ற காய்கறி விலைகள் குறைவாக உள்ளது” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com