‘கண்மணி அன்போடு...’ பாடலால் அதிரும் குணா குகை – கொடைக்கானலில் குவியும் சுற்றுலா பயணிகள் #Video

கொடைக்கானலில் தொடர்ந்து அதிகரித்து வரும் கேரள சுற்றுலா பயணிகள்... கண்மணி அன்போடு பாடலால், அதிரும் குணா குகை...
Guna cave
Guna cavept desk

செய்தியாளர்: செல்வ. மகேஷ் ராஜா

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள குணா குகை, Manjummel Boys மலையாள படத்திற்கு பின்னர் அதிக அளவில் பிரபலமாகி வருகிறது. நாளுக்கு நாள் குணா குகை சுற்றுலா தலத்தை காண்பதற்காக, தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர். கூட்டம் கூட்டமாக வரும் சுற்றுலா பயணிகள் குணா குகை பகுதியை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.

Guna cave
நண்பனை உயிரோடு மீட்ட ‘மஞ்ஞுமல் பாய்ஸ்’.. உண்மையில் 2008ம் ஆண்டு குணா குகைக்குள் நடந்தது என்ன?
குணா குகையில் குவியும் சுற்றுலா பயணிகள்
குணா குகையில் குவியும் சுற்றுலா பயணிகள்pt desk

இந்நிலையில் குணா குகை பகுதியில் குவியும் சுற்றுலா பயணிகள் இயற்கையாக அமைந்துள்ள வேர்ப்பகுதியில் அமர்ந்து, குணா படத்தில் வரும் ‘கண்மணி அன்போடு’ பாடலை, குகை மட்டுமல்ல... விண்ணும் மண்ணும் அதிரும் வண்ணம் கோரசாக பாடி மகிழ்ந்து வருகின்றனர்.

Guna cave
அலைமோதும் கூட்டம்; கேரளாவையே ஓவர்டேக் செய்த வசூல்! தமிழக ஆடியன்ஸை "Manjummel Boys" கவர்ந்தது எப்படி?

ஒரு படம், அந்த படத்தில் இடம்பெற்ற சுற்றுலா தலத்தை, இந்த அளவிற்கு பிரபலப்படுத்தியுள்ளது இதுவே முதல் முறையாக பார்க்கப்படுகிறது. அந்த காணொளியை இங்கே காணலாம் -

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com