\
கொடைக்கானல்: தாத்தா அப்பாவை பார்த்து அதேபோல் உடற்பயிற்சி செய்து அசத்தும் 4 வயது சிறுமி

கொடைக்கானல்: தாத்தா அப்பாவை பார்த்து அதேபோல் உடற்பயிற்சி செய்து அசத்தும் 4 வயது சிறுமி

கொடைக்கானல்: தாத்தா அப்பாவை பார்த்து அதேபோல் உடற்பயிற்சி செய்து அசத்தும் 4 வயது சிறுமி
Published on

கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் கிராமத்தில்; 4 வயது சிறுமி உடற்பயிற்சி செய்து அசத்துகிறார்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த அறிவழகன் - பாண்டீஸ்வரி தம்பதியின் 4 வயது மகள் தீபிகா. இந்த சிறுமி இளம் வயது முதலே உடற்பயிற்சி செய்து அசத்தி வருகிறார். சிறுமியின் தாத்தா மற்றும் தந்தை ஆகியோர் சிலம்பம் மற்றும் உடற்பயிற்சி கலைகளை தொழிலாக செய்து வருவதால், இந்த சிறுமியிடமும் அதேதிறமை உள்ளதாக சிறுமியின் தாயார் கூறினர்.

இதையடுத்து தீபிகா ஒரு நிமிடத்தில் 75 தண்டால்கள் எடுத்து, அப்துல் கலாம் உலக சாதனை விருது பெற்றுள்ளதாக பெற்றோர் பெருமிதம் அடைகின்றனர். இவரை இதே துறையில் ஊக்கப்படுத்தி ஒலிம்பிக் போட்டி வரை கொண்டுசெல்ல அரசு உதவியுடன் தேவையான பயிற்சிகளை அளிக்க உள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com