’சேரி’ வார்த்தைப் பதிவு: எதிர்ப்பு கிளம்பிய நிலையில் குஷ்பூ கொடுத்த அடடே விளக்கம்!

சேரி தொடர்பாக பதிவிட்ட கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதுகுறித்து நடிகை குஷ்பூ விளக்கம் அளித்துள்ளார்.
குஷ்பு
குஷ்புபுதிய தலைமுறை

த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேச்சு

நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் அளித்த பேட்டி, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுதொடர்பான விவாதம் அடங்குவதற்குள், நடிகையும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ வெளியிட்ட பதிவு ஒன்று தற்போது பேசுபொருளாகி உள்ளது.

மன்சூர் அலிகான் பதில்
மன்சூர் அலிகான் பதில்முகநூல்

மணிப்பூர் பெண்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது நடவடிக்கை எடுக்காத தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு, த்ரிஷாவுக்காகக் குரல் கொடுப்பதாகக் கூறி, எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒரு நபர் விமர்சனம் செய்து பதிவு வெளியிட்டிருந்தார்.

இதையும் படிக்க: "ஃபைனலில் நீங்க என்ன செஞ்சீங்க? அந்த நாளுக்காகதான் எல்லா நடக்குது" கைஃப்-க்கு வார்னர் கொடுத்த ரிப்ளை

நடிகை குஷ்பு  பதிவு!

இதற்குப் பதிலளித்த குஷ்பூ, ’தங்களைப்போல், சேரி மொழியில் தன்னால் பேசமுடியாது என்றும், என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கண்விழித்துப் பார்க்க வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தார். அவரின் அந்தப் பதிவில், ‘சேரி மொழி’ என குறிப்பிடப்பட்டிருந்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ’சேரி’ என்ற வார்த்தையை குறிப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கிய நடிகை காயத்ரி ரகுராம், தற்போது குஷ்பூவுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.

குஷ்பூவின் பதிவுக்கு கிளம்பிய எதிர்ப்பு

இதுதொடர்பாக காயத்ரி ரகுராம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘அறியாமல் ’சேரி’ என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்காக, தான் அதிக வலியை உணர்ந்ததாகவும், இந்த விவகாரத்தில், தான் ஒரு பெரிய பாடமாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த வார்த்தையைப் பயன்படுத்தியதற்காக இன்றுவரை குற்ற உணர்ச்சியுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ள காயத்ரி ரகுராம், குஷ்பு தன் தவறை உணர்ந்து எக்ஸ் தள பக்கத்தில் இருந்து, தன் பதிவை விரைவில் நீக்கிவிடுவார் என நம்புவதாக தெரிவித்திருந்தார். அதோடு, ‘சேரி மொழி’ என பேசியதற்காக அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிக்க: ரூ.18 கோடி வர்த்தகம்! ஆவேஷ் கான் - தேவ்தத் படிக்கல் இருவரையும் நேராக மாற்றிக்கொண்ட RR - LSG அணிகள்!

இதேபோல், பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்ட பதிவில், சேரி மொழி என குறிப்பிட்டுப் பேசிய குஷ்பூவை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளது. ’பெண்களை இழிவுப்படுத்தும் மோசமான வார்த்தைகளுக்கு சேரி மொழி என முத்திரை குத்துவதாகவும், அவதூறு மற்றும் அவமரியாதையைக் குறிக்க இந்த வார்த்தையை இயல்பாக்கம் செய்வது என்பது, ஒரு சமூகத்தின் வரலாறு மற்றும் கலாசாரத்தை புறக்கணிக்கும் செயல்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’குஷ்பூவின் பேச்சு கண்டனத்திற்குரியது என தெரிவித்துள்ள நீலம் பண்பாட்டு மையம், தன் பேச்சுக்கு குஷ்பு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்’ என வலியுறுத்தி உள்ளது.

இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில், சேரி மொழி என்பதன் பொருளறிந்துதான் குஷ்பூ அவ்வாறு பதிவிட்டாரா என கேள்வி எழுப்பியதோடு, அறியாமல் அப்படி பதிவிட்டிருந்தால், அதை உடனடியாக குஷ்பு நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.

விளக்கம் அளித்துள்ள குஷ்புசுந்தர்

இந்த நிலையில் நடிகை குஷ்பூ இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர், “பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன்னணியில் நிற்பேன். பிரெஞ்சு மொழியில் சேரி என்ற வார்த்தைக்கு அன்பு என்பதே பொருள். அன்பு என்ற அர்த்தத்திலேயே சேரி என்பதை பயன்படுத்தினேன்” என விளக்கம் கொடுத்துள்ளார்.

இதையும் படிக்க: ”பலர் சேவாக் என நினைக்கலாம் ; எனக்கு பிடித்த பேட்டிங் பார்ட்னர் எம்.எஸ்.தோனி தான்” - கவுதம் கம்பீர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com