ரூ.18 கோடி வர்த்தகம்! ஆவேஷ் கான் - தேவ்தத் படிக்கல் இருவரையும் நேராக மாற்றிக்கொண்ட RR - LSG அணிகள்!

2024 ஐபிஎல் தொடருக்காக வீரர்களை வர்த்தக ரீதியில் கைமாற்றி வருகின்றன ஐபிஎல் அணிகள். அந்தவகையில் RR-LSG அணிகளிலிருந்து நேரடியாக ஆவேஷ் கான் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் மாற்றப்பட்டுள்ளனர்.
avesh khan - padikkal
avesh khan - padikkalipl

2024 ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் 19 தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கவுள்ள நிலையில், அதற்கு முன்னதாகவே வீரர்களை அணி நிர்வாகங்கள் வர்த்தக ரீதியாக மாற்றிக்கொள்ள பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது.

avesh khan
avesh khan

அதன்படி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டு வீரர்களை நேரடியாக இடம்மாற்றிக்கொண்டதாக அறிவித்துள்ளன.

ஆவேஷ் கான்-தேவ்தத் படிக்கல் இட மாற்றம்!

2022 மெகா ஐபிஎல் ஏலத்தில் ஆவேஷ் கானை 10 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், தேவ்தத் படிக்கல்லை 7.75 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விலைக்கு வாங்கின. இந்நிலையில் இவ்விரு வீரர்களையும் அதே விலைக்கு வர்த்தக ரீதியாக இடம் மாற்றம் செய்துள்ளன ராஜஸ்தான் மற்றும் லக்னோ அணிகள்.

padikkal
padikkal

அதன்படி ராஜஸ்தான் அணியிலிருந்த தேவ்தத் படிக்கல் லக்னோ அணிக்கும், LSG அணியிலிருந்த ஆவேஷ் கான் ராஜஸ்தான் அணிக்கும் வர்த்தக ரீதியில் மாற்றப்பட்டுள்ளனர். ஆவேஷ் கான் லக்னோ அணிக்காக 22 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்டுகளும், தேவ்தத் படிக்கல் ராஜஸ்தான் அணிக்காக 28 போட்டிகளில் விளையாடி 637 ரன்களும் எடுத்துள்ளனர். தொடர்ந்து பல அணிகள் வீரர்கள் மாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com