சுபாஷினி - சுர்ஜித் - கவின்
சுபாஷினி - சுர்ஜித் - கவின்web

”கவினும் நானும் உண்மையா காதலித்தோம்.. அன்று நடந்தது இதுதான்!” - வீடியோ வெளியிட்ட கவினின் காதலி!

நெல்லையில் ஐடி ஊழியர் கவின் பட்டப்பகலில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட நிலையில், நான்கு நாட்கள் கழித்து கவினின் காதலியும் கொலை செய்த சுர்ஜித்தின் சகோதரியுமான சுபாஷினி வீடியோ வெளியிட்டு பேசியுள்ளார்.
Published on

நெல்லை பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி கிருஷ்ணகுமாரி. இத்தம்பதிக்கு சுர்ஜித் (24) என்ற மகனும், சுபாஷினி என்ற மகளும் இருக்கின்றனர். சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

இதற்கு முன் சரவணனின் குடும்பத்தினர் தூத்துக்குடியில் இருந்தபோது அவரது மகள் படித்த பள்ளிக்கூடத்தில் கவின் குமார் (26) எனும் இளைஞர் படித்திருக்கிறார். ஏரல் அருகேயுள்ள ஆறுமுக மங்கலத்தைச் சேர்ந்த கவினுக்கும், சப்-இன்ஸ்பெக்டர் சரவணனின் மகளுக்கும் இடையே பள்ளிப்படிப்பின்போதே பழக்கம் ஏற்பட்ட நிலையில் இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலை
ஐடி ஊழியர் கவின் ஆணவப் படுகொலைweb

இந்நிலையில் தற்போது சென்னையிலுள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வரும் கவின்குமார் கடந்த 27-ம் தேதி சொந்த ஊருக்கு சென்ற நிலையில், தனியாக பேசவேண்டும் என்று அழைத்துச்சென்ற சுபாஷினியின் சகோதரர் சுர்ஜித் கவினை மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டி படுகொலை செய்தார்.

சாதியின் பெயரால் நிகழ்த்தப்பட்ட இந்த ஆணவப் படுகொலை தமிழகத்தையே உலுக்கிய நிலையில், சுர்ஜித் கைதுசெய்யப்பட்டு, அவருடைய தந்தை சரவணனும் கைதுசெய்யப்பட்டார்.

இந்த சூழலில் 4 நாட்களுக்கு பிறகு கவினின் கொலை குறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் காதலி சுபாஷினி, கவினின் கொலைக்கும் தன்னுடைய பெற்றோருக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சுபாஷினி - சுர்ஜித் - கவின்
"குற்றவாளியின் தாயார் ஏன் கைதாகவில்லை?" - கேள்வியெழுப்பும் திருமாவளவன்..!

என் அப்பா அம்மாவுக்கும் கொலைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை..

கவின் கொலை குறித்து பொதுவெளியிலும், சமூக வலைதளத்திலும் பல்வேறு கருத்துகள் வெளியிடப்பட்டன. பலர் கவினை காதலித்துவிட்டு அந்த பெண் காதலிக்கவில்லை என்று கூறிவிட்டதாக மோசமான வார்த்தைகளால் வசைபாடி கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்த சூழலில் காதலன் கொல்லப்பட்டது குறித்து வீடியோ வெளியிட்டிருக்கும் காதலி சுபாஷினி, “நானும் கவினும் உண்மையா லவ் பண்ணோம், எங்களுக்கு செட்டிலாக கொஞ்சம் டைம் தேவைப்பட்டது. மே மாதம் கவினும் சுர்ஜித்தும் பேசிகிட்டாங்க, அந்த டைம்லயே அப்பா கிட்ட சுர்ஜித் சொல்லிட்டான். அப்பா என்கிட்ட கூப்டு கேட்டப்போ இல்ல பா நான் லவ் பண்ணலனு சொல்லிட்டன். ஏன்னா கவின் என்கிட்ட டைம் கேட்டிருந்தான், ஒரு 6 மாதம் கழிச்சு சொல்லு ப்ளீஸ்னு என்கிட்ட சொன்னான். அதனால தான் நான் அப்பாகிட்ட அன்னைக்கு சொல்லல.

ஆனா அடுத்த 2 மாசத்துக்குள்ள கவினுக்கும் சுர்ஜித்துக்கும் நடுவுல என்ன பேசிக்கிட்டாங்க, என்ன நடந்துச்சுனு தெரியாது, அதுக்குள்ள இப்படி நடந்துடுச்சு. கவினுக்கு சுர்ஜித் போன் பண்ணி பொண்ணு பார்க்க வாங்க, இவ கல்யாணம் முடிஞ்சா தான் என்னோட எதிர்காலத்தை பார்க்கமுடியும்னு சொன்னான். அது கண்டிப்பா எனக்கு தெரியும்.

27-ம் தேதி கவின் வர்றான்னு எனக்கு தெரியாது, நான் 28-ம் தேதி ஈவ்னிங் தான் வர சொல்லிருந்தன். அவங்க தாத்தாவுக்கு உடல்நிலை சரியில்லாதனால அவங்களுக்கு தனியா அறை பார்த்துட்டு வரசொல்லலாம்னு நினைச்சிட்டு இருந்தன். ஆனா 27-ம் தேதி மருத்துவமனைக்கு கவின் வந்தப்போ, நான் அவங்க அம்மா கிட்டயும், மாமா கிட்டயும் மட்டும் தான் பேசிட்டிருந்தன். அப்புறம் கவின் வெளில போயிட்டான். நான் ட்ரீட்மெண்ட் வழிமுறைலாம் என்னனு சொல்லி விளக்கம் கொடுத்திட்டு இருந்தன். அப்போ தான் கவின் எங்க போயிட்டான்றதயே நாங்க யோசிச்சோம்.

நானும், கவின் அம்மாவும் மாத்தி மாத்தி கால் பண்ணோம் அவன் எடுக்கல. அவங்க அம்மா பசிக்குதுனு சொன்னதால நீங்க போய் சாப்பிடுங்க, நான் கவின் ஃபோன் எடுத்ததும் வர சொல்றனு சொன்னன். அதுக்குள்ள தான் இப்படி எல்லாம் ஆயிடுச்சு.

கவின் மரணம் குறித்து யாரும் இஷ்டத்துக்கு வதந்திய கிளப்ப வேண்டாம், உங்களுக்கு தோணுற எல்லாத்தையும் பேசாதீங்க, என் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இதுல எந்த சம்மந்தமும் கிடையாது. அவங்களுக்கு எதுவும் தெரியாது. இதை இதோட விட்டுடுங்க, விட்டுடுங்க” என பேசியுள்ளார்.

ஐடி ஊழியர் கவின்
ஐடி ஊழியர் கவின்

மற்றொரு வீடியோவில், “நான் தான் சுபாஷினி, எனக்கும் கவினுக்கும் என்ன நடந்ததுனு எனக்கும் அவனுக்கும் மட்டும்தான் தெரியும். எங்க உறவு பத்தியோ, எங்க ரெண்டு பேர் பத்தியோ யாரும் இனி தப்பா பேச வேண்டாம். உங்க யாருக்குமே எதுவுமே தெரியாது, உண்மை தெரியாம யாரும் எதுவும் பேசவேண்டாம். எங்க அப்பா அம்மாவுக்கும் இதுக்கும் எந்த தொடர்பும் கிடையாது, அவங்கள தண்டிக்கணும்னு நினைக்கிறது தப்பு. அவங்கள விட்டுடுங்க.

இவ்ளோ நிலைமையில எல்லாரும் அவங்க அவங்களுக்கு என்ன தோணுதோ எல்லாத்தையும் பேசிட்டிங்க, என்னோட ஃபீலிங்ஸ் என்ன, நான் என்ன நினைக்கிறன்னு மதிப்பு கொடுத்து பேசுன ஒரு பொண்ணுக்கு மட்டும் ரொம்ப நன்றி” என பேசியுள்ளார்.

சுபாஷினி - சுர்ஜித் - கவின்
நெல்லை ஆணவக் கொலை வழக்கில் கைதான சுர்ஜித்.. ஆயுதங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com