ரூபாய் நோட்டுகளால் தன அலங்காரம்
ரூபாய் நோட்டுகளால் தன அலங்காரம்pt desk

சித்திரை கனி | முத்து மாரியம்மனுக்கு 4 கோடி ரூபாய் நோட்டுகளால் தன அலங்காரம் - பக்தர்கள் பரவசம்

கோவையில் சித்திரை கனியை முன்னிட்டு காட்டூர் முத்து மாரியம்மனுக்கு 4 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகளால் தன அலங்காரம் செய்யப்பட்டது.
Published on

செய்தியாளர்: பிரவீண்

தமிழ் புத்தாண்டு சித்திரை கனி தினத்தை முன்னிட்டு அனைத்து கோயில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது. அதன்படி கோவை காட்டூர் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோயில் மூலஸ்தானம் முழுவதும் 100, 200 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கபட்டது. மேலும் முத்துமாரி அம்மனுக்கு தங்க நகைகளால் தன அலங்காரம் செய்யப்பட்டது.

ரூபாய் நோட்டுகளால் தன அலங்காரம்
இன்னும் வெப்பநிலை உயரக்கூடும்; வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!

இதன் மொத்த மதிப்பு நான்கு கோடி ரூபாய் ஆகும். தன அலங்காரத்தில் காட்சியளித்த முத்து மாரியம்மனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யபட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com