வெப்பநிலை pt
தமிழ்நாடு
இன்னும் வெப்பநிலை உயரக்கூடும்; வானிலை ஆய்வு மையம் விடுத்த எச்சரிக்கை!
தமிழகத்தில் பல இடங்களில் வெப்பநிலையில் வெளுத்துவாங்கும்நிலையில், மேலும் அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருப்பது மக்களை கவலை அடைய செய்துள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் வெப்ப நிலை உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகம் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு நாட்கள் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் என்பதால் ஒருசில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம் என கூறப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் முதல் 39 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. <