உயிரிழந்த தாமரைக்கண்ணன்
உயிரிழந்த தாமரைக்கண்ணன்pt web

கரூர் துயரம் : குழந்தையின் வருகைக்கு காத்திருந்த கர்ப்பிணி மனைவி... கணவரை பறிகொடுத்த சோகம்

தவெக பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கர்ப்பிணி பெண்ணின் கணவர் தாமரைக்கண்ணன் உயிரிழந்துள்ளார். இந்நிலையில், கர்ப்பிணிப் பெண் கணவரின் உடலைப் பார்த்துக் கதறி அழுவது காண்போரை கலங்க வைத்துள்ளது.
Published on

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி ஒருவர், தனது கணவரை இழந்து நிற்கதியாய் தவிக்கிறார்.. வயிற்றில் குழந்தையுடன், கணவரை இழந்த பெண்ணின் கதறுலுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறது உறவுகள்... பிறக்கப்போகும் குழந்தையின் வாழ்க்கையை திட்டமிட்டு, பல கனவுகளோடு வளைகாப்பு முடிந்து தாய் வீட்டிற்கு சென்ற தீபாவின் வாழ்வில் பேரிடியாக வந்தது கணவரின் இறப்புச் செய்தி.

கணவரை இழந்த கர்ப்பிணிப்பெண்
கணவரை இழந்த கர்ப்பிணிப்பெண்pt web

திண்டுக்கல் மாவட்டம் ஒத்தப்பட்டியைச் சேர்ந்த தாமரைக்கண்ணன், கரூரில் நடந்த விஜயின் பரப்பரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி மரணமடைந்தார். கணவரின் சடலத்தைக் கண்ட நிறைமாத கர்ப்பிணியான தீபா, தன் கட்டுப்பாட்டை இழந்து கதறி அழுத காட்சி, அங்கிருந்தவர்களை உலுக்கியது... இனி எங்களுக்கு யார் இருக்கிறார்கள்? என்று கதறிய தீபாவின் துயரத்திற்கு ஆறுதல் சொல்ல முடியாமல், உற்றார் உறவினர்கள் கண்ணீர்விட்டனர். பிரசவத்திற்காகக் காத்திருந்த அவர் வாழ்வில், பிறக்கப்போகும் குழந்தையைத் திட்டமிட்ட தந்தையின் பிரிவால் ஏற்பட்ட இந்தத் துயரம், காண்பவர் மனதை உருகச் செய்ததுள்ளது.

உயிரிழந்த தாமரைக்கண்ணன்
"என் வாழ்வின் மிகப்பெரிய துக்கத்தை அனுபவித்து வருகிறேன்" - மௌனம் கலைத்த ஆதவ் அர்ஜுனா!
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com