தவெக பொதுசெயலாளர் ஆனந்த்
தவெக பொதுசெயலாளர் ஆனந்த்pt web

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் | உச்சநீதிமன்றத்தை நாடிய ஆனந்த் மற்றும் நிர்மல்குமார்

கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் முன்ஜாமீன் கோரி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகிய இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கின்றனர்.
Published on

கரூரில் த.வெ.க  பரப்புரையில்  ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் த.வெக நிர்வாகிகள் ஆனந்த் மற்றும் சி.டி.ஆர். நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருக்கின்றனர்.

pt

த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 27ம் தேதி கரூரில் நடத்திய பரப்புரையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் மரணமடைந்தனர். இந்த விவகாரத்தில் த.வெ.க. பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரும் முன் ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தை அணுகினர். ஆனால் இருவரது முன் ஜாமின் மனுவையும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த முன் ஜாமின் மனுவை விரைந்து விசாரணைக்கு எடுக்க கோரி திங்கட்கிழமை தலைமை நீதிபதி அமர்வில் முறையிடவும் திட்டமிட்டுள்ளனர்.

தவெக பொதுசெயலாளர் ஆனந்த்
“தமிழ்நாட்டை நாசப்படுத்தத் துடிக்கும் கூட்டத்தை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்!” – மு.க.ஸ்டாலின்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com