39 people killed in Karur Tvk rally incident
கரூர் தவெக பரப்புரையில் 39 பேர் உயிரிழப்பு சம்பவம், பிரேமலதா விஜயகாந்த் பேட்டிpt web

த.வெ.க கூட்டத்திற்கு குறுகலான சாலையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்..? - பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

த.வெ.க கூட்டத்திற்கு பத்தாத, குறுகலான சாலையை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? என தே.மு.தி.க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
Published on

கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 நபர்கள் உயிரிழந்துள்ள நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், தே.மு.தி.க., பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கரூர் செல்கிறார்.

39 people killed in Karur Thaweka rally incident
கரூர் தவெக பரப்புரையில் 39 பேர் உயிரிழப்பு சம்பவம்pt web

இந்த நிலையில், சென்னை விமான நிலையம் வந்த அவர், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரடியாக சந்திக்கவுள்ளேன். தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் இதுவரை நடந்தது இல்லை. குறுகலான பாதை அது. அந்த இடம், அந்த கூட்டத்திற்கு பத்தாது. ஏன் அந்த இடம் தேர்ந்தெடுத்தாங்கன்னு தெரில? மரணத்தின் மூலம் அரசியல் பேசுவதை விட, பாதிக்கப்பட்டவர்களுக்காக களத்தில் நிற்க வேண்டும். நானும் கேப்டனுடன் பல்வேறு கூட்டங்கள், பிரச்சாரங்களுக்கு சென்றுள்ளேன். ஆனால், இது ஒரு தவறான முன் உதாரணம். இனி இதுபோல நடக்கக்கூடாது. எல்லாருக்கும் வேதனையான விஷயம். ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்தார்.

39 people killed in Karur Tvk rally incident
”10,000 பேர் வருவார்கள் என சொன்னார்கள்.. ஆனால் 27,000 பேர் கூடினார்கள்” - டிஜிபி விளக்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com