போலீசார் விசாரணை
போலீசார் விசாரணைpt desk

கரூர்: 6 வயது குழந்தை மற்றும் கர்ப்பிணி மனைவியை கொலை செய்து விட்டு விபரீத முடிவெடுக்க முயன்ற நபர்!

கரூரில் 6 மாத கர்ப்பிணி மனைவி மற்றும் ஆறு வயது பெண் குழந்தையை கொலை செய்துவிட்டு, தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட நபரை மீட்ட போலீசார், அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: வி.பி.கண்ணன்

கரூர் வெங்கமேடு, விவிஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் செல்வகணேஷ் (45) - கல்பனா (42) தம்பதியர். இவர்களுக்கு சாரதி பாலா (6) என்ற மகள் உள்ளார். கரூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் கூலி வேலை செய்து வரும் செல்வகணேஷ், கடந்த 7 ஆண்டுகளாக வெங்கமேடு பகுதியில், வாடகை வீட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

Death
Deathpt desk

இந்நிலையில், 6 மாத கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி கல்பனா மற்றும் மகள் சாரதி பாலா ஆகிய இருவரையும் கொலை செய்த செல்வகணேஷ் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த வெங்கமேடு காவல் நிலைய போலீசார், மயக்க நிலையில் இருந்த செல்வகணேஷை மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

போலீசார் விசாரணை
கர்நாடகா: கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்து – கோயிலுக்குச் சென்ற 4 பேர் உயிரிழந்த சோகம்

மேலும், கல்பனா மற்றும் சாரதிபாலா ஆகியோர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துவிட்டு கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com