கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்து
கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்துpt desk

கர்நாடகா: கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்து – கோயிலுக்குச் சென்ற 4 பேர் உயிரிழந்த சோகம்

கர்நாடகாவில் நிகழ்ந்த சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Published on

செய்தியாளர்: ம.ஜெகன்நாத்

கர்நாடக மாநிலம் கலபுர்கி மாவட்டத்தில் கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில், காரில் பயணம் செய்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்து கமலாப்பூர் போலீசார், இறந்தவர்களின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த சரக்கு வாகன ஓட்டுனரை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்து
கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்துpt desk

இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த பார்கவ கிருஷ்ணா (55), சங்கீதா (45), உத்தம் ராகவன் (28) மற்றும் கார் ஓட்டுநர் ஆகிய நால்வரும் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

கார் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்து
சேலம்: இருசக்கர வாகனத்தின் மீது மோதி சாலையில் கவிழ்ந்த பேருந்து - தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு

இவர்கள் கானகாபுரில் உள்ள ஸ்ரீ தத்தாத்ரேயா கோயிலுக்குச் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டதும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com