கார்களை திருடிய நபர் கைதுpt desk
தமிழ்நாடு
கரூர் | அரசு மருத்துவர்களின் கார்களை திருடிய நபர் கைது
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர்களின் கார்களை திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
செய்தியாளர்: வி.பி.கண்ணன்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவராக பணிபுரியும் தட்சிணாமூர்த்தி மற்றும் பெண் மருத்துவர் கவிதா ஆகியோர் தங்கள் கார்களை மருத்துவமனை பார்க்கிங்கில் நிறுத்தி வைத்திருந்தனர். இதையடுத்து தங்களது கார்களை காணவில்லை என பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதைத் தொடர்ந்து போலீசார், மருத்துவக் கல்லூரியை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
Arrestedpt desk
அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமான நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் கரூர் பெரிய குளத்துப்பாளையத்தைச் சேர்ந்த பாசில் என்பது தெரியவந்தது. இவர், மருத்துவமனையில் நிறத்தியிருந்த இரண்டு கார்களை திருடியதாக ஒப்புக் கொண்டார். இதன் பேரில் இரண்டு கார்களை மீட்ட போலீசர், பாசிலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.