\
கருணாநிதி நினைவிட விவகாரம்: தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை!

கருணாநிதி நினைவிட விவகாரம்: தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை!

கருணாநிதி நினைவிட விவகாரம்: தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை!
Published on

கருணாநிதி உடலை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்யவில்லை என்று கூறப்படுகிறது.

மறைந்த திமுக தலைவர் கருணாநிதி உடலை மெரினா கடற்கரையில், அண்ணாதுரை நினைவிடத்துக்கு அருகே அடக்கம் செய்ய தமிழக அரசிடம் திமுக கோரிக்கை வைத்தது. ஆனால், வழக்குகள் நிலுவையில் உள்ளதாலும், சட்டச் சிக்கல்கள் இருப்பதாலும் அங்கு இடம் அளிக்க இயலாது என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. மெரினாவுக்கு பதிலாக காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கரில் இடம் தருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கக் கோரி திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை அவசர வழக்காக உயர்நீதிமன்றம் விசாரித்தது. அரசு தரப்பிலும் திமுக தரப்பிலும் கடும் வாதங்கள் முன் வைக்கப்பட்டன. பிறகு நீதிபதிகள், கருணாநிதியை மெரினாவில் அடக்கம் செய்வதற்கான இடத்தை ஒதுக்குமாறு அரசுக்கு அதிரடி உத்தரவிட்டனர். இதையடுத்து மெரினாவில் அண்ணா சமாதி அருகே கருணாநிதி நினைவிடம் அமைக்க ஆயத்த பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com