நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்புதிய தலைமுறை

குமரி | காதலி வீட்டில் இளைஞர் மர்ம மரணம் - நயினார் நாகேந்திரன் பரபரப்பு பதிவு.. நடந்தது என்ன?

குலசேகரம் அருகே திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், காதலியின் வீட்டில் இளைஞர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், நயினார் நாகேந்திரன் பரபரப்பு பதிவை இட்டுள்ளார்.
Published on

செய்தியாளர்: மனு

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் அருகே கல்வெட்டாங்குழி பகுதியைச் சேர்ந்த முகமது அலி என்பவரது மகள் சபீனா. கல்லூரி மாணவியான இவர், பள்ளியில் படிக்கும் போது காவுவிளை பகுதியைச் சேர்ந்த தனுஷ் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் மாணவியின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை அவரது பெற்றோர் செய்து வருவதை அறிந்த தனுஷ், மாணவியின் பெற்றோரிடம் திருமணத்திற்கு சம்பந்த கேட்டதாகக் கூறப்படுகிறது..

இதற்கு சபீனாவின் பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து தனுஷ் நேற்று இரவு காதலியின் வீட்டுக்கு வந்து; தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த குலசேகரம் போலீசார், தனுஷின் உடலை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நயினார் நாகேந்திரன்
பயனர்கள் தரவு திருட்டு அபாயம்.. டிக்டாக் செயலி தடைக்கு முன் ட்ரம்ப் புதிய அறிவிப்பு!

இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது வலைதள பக்கத்தில் இந்த சம்பவம் குறித்து பதிவிட்டுள்ளார். அவர் போட்டுள்ள பதிவில்...

பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் திமுகவில் இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன:

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தில் மாற்று மத பெண்ணை காதலித்து திருமணம் செய்யவிருந்த இந்து பட்டியல் சமூக இளைஞரான தனுஷ் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதுவும் அவர் காதலித்த பெண்ணின் வீட்டு மாடியிலேயே அவர் தூக்கிட்டிருப்பது மிகுந்த சந்தேகத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் நெருங்கிய உறவினர்கள் திமுகவில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், இந்த வழக்கு முறையாக விசாரிக்கப்படுமா என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.

பெண்ணின் வீட்டிலேயே தூக்கிட்டுக் கொண்டார் என்பது நம்பும்படியான செய்தியாக இல்லை:

நல்ல முறையில் கல்வி கற்று, கோவையில் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் இளைஞரான தனுஷ் தான் காதலித்த பெண்ணின் வீட்டிலேயே தூக்கிட்டுக் கொண்டார் என்பது நம்பும்படியான செய்தியாக இல்லை. கடந்த நான்காண்டுகளில் தமிழகத்தில் சீர்குலைந்து போயுள்ள சட்டம் ஒழுங்கு அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. குறிப்பாக, பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் இந்த ஆட்சியில் தான் கொடூர உச்சங்களைத் தொட்டிருக்கிறது. ஆகவே இவ்வழக்கில் எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல் முறையான பிரேத பரிசோதனை செய்து உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டியது காவல்துறையினரின் பொறுப்பு.

நயினார் நாகேந்திரன்
பயனர்கள் தரவு திருட்டு அபாயம்.. டிக்டாக் செயலி தடைக்கு முன் ட்ரம்ப் புதிய அறிவிப்பு!

திமுக-வின் அரசியல் அழுத்தத்திற்கு ஆட்படாமல், உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்:

அந்தப் பெண்ணின் குடும்பத்திற்கும் திமுக-விற்கும் நெருங்கிய தொடர்புகள் இருப்பதால் திமுகவின் வழக்கமான அராஜகப் போக்கிற்கு தமிழக காவல்துறை இணங்கக் கூடாது. ஆளுங்கட்சியின் வாக்கரசியலுக்கு துணை போகும் நோக்கத்தோடு ஒருதலை பட்சமாக காவல்துறை செயல்படக் கூடாது. ஆட்சி மாற்றத்திற்கு இன்னும் ஒரு சில மாதங்கள் தான் உள்ள நிலையில், ஆளும் திமுக-வின் அரசியல் அழுத்தத்திற்கு ஆட்படாமல், இவ்வழக்கின் உண்மைத் தன்மையை விரைவாக வெளிக்கொணர வேண்டுமென தமிழக காவல் துறையினரை வலியுறுத்துகிறேன். மேலும், பாதிக்கப்பட்ட அந்த இளைஞரின் குடும்பத்தின் பக்கம் தமிழக பாஜக உறுதியாக நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com