டிக்டாக் செயலி தடைக்கான நாளை நீடித்த ட்ரம்ப்web
டெக்
பயனர்கள் தரவு திருட்டு அபாயம்.. டிக்டாக் செயலி தடைக்கு முன் ட்ரம்ப் புதிய அறிவிப்பு!
அமெரிக்காவில் டிக்டாக் செயலி கூடுதல் நாட்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் டிக்டாக் செயலி மேலும் 90 நாட்கள் இயங்குவதற்கு அதிபர் ட்ரம்ப் அனுமதித்துள்ளார்.
டிக்டாக் செயலி மூலம் பயனர்கள் தரவு களவு..
மூன்றாவது முறையாக நீட்டிக்கப்பட்ட இந்த உத்தரவு, டிக்டாக் செயலியை அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்பனை செய்யத் தேவையான நேரத்தை பெற்றுத்தரவே வழங்கப்படுகிறது.
சீனாவை சேர்ந்த டிக்டாக் செயலி மூலம், பயனர்களின் தரவுகள் சீன அரசுக்கு செல்லும் அபாயம் இருப்பதாக எழுந்த புகார்களால் அமெரிக்காவில் அதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை அமெரிக்க நிறுவனங்கள் வாங்கி மறுசீரமைப்பு செய்யும் முயற்சி நடைபெற்று வருகிறது.