கனிமொழி குறித்து வைரலாகும் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது.
கனிமொழி குறித்து வைரலாகும் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது.Pt web

'கோடி மக்கள் உன் பின்னால்... முடிவெடு..' கனிமொழி குறித்து வைரலாகும் வீடியோ!

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி தொடர்பாக இன்றைய தினம் சமூக வலைதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் வீடியோ விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
Published on

திமுகவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழியில் அவரது மகனும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் பாஜகவிற்கு எதிராக தீவிரமான அரசியலை முன்னெடுத்து வருகிறார். அதேபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தங்கையும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி எம்.பி கட்சியின் மாநில அரசியலுக்கான பிரதிநிதியாக டெல்லியில் தீவிரமாக களமாடிக்கொண்டிருக்கிறார்.

எம்.பி கனிமொழி
எம்.பி கனிமொழிPt Web
கனிமொழி குறித்து வைரலாகும் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது.
”தமிழ்நாடு அயோத்தி போல மாற வேண்டுமா?..” - நயினார் நாகேந்திரன் கருத்துக்கு கனிமொழி பதிலடி!

இந்நிலையில், இணையதளத்தில் வைரலாகிக் கொண்டிருக்கும் வீடியோவில், சட்டப்பேரவைத் தேர்தலில் கனிமொழி போட்டியிடுகிறாரா? என்கிற கேள்விக்குறியுடன் ஒருவர் செய்தித்தாளை படித்துக்கொண்டிருக்கிறார். அதன் பின்னர், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் இணைந்து அவரை சட்டப்பேரவைக்கு அழைத்து வருவது போன்றும், எம்.எல்.ஏ இருக்கையில் அமர வைப்பது போன்றும் அந்த வீடியோவில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது.

"நீ நினைத்தால் எதுவும் நடக்கும். கோடி மக்கள் உன் பின்னால்... முடிவெடு..." என்கிற பாடல் வரிகளும் அழுத்தமாக அதில் ஒலிக்கிறது. கனிமொழி ஆதரவாளர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்கும் வகையில் வெளியிட்டிருக்கும் இந்த வீடியோ பேசுபொருளாகி வருகிறது.

கனிமொழி குறித்து வைரலாகும் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது.
"தமிழக மக்கள் உங்கள் துரோகத்தை ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்" - இபிஎஸ்க்கு கனிமொழி பதிலடி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com