\
Kanimozhi Alleges 700 Murders, 400 Crimes Against Women Under TVK Rule
விஜய் - கனிமொழிPt web

”தவெக ஆட்சியில் 700 கொ*லகள்” - திமுக ஆர்ப்பாட்டத்தில் கனிமொழி குற்றச்சாட்டு!!

தவெக ஆட்சி அமைந்ததில் இருந்து 700 கொலைகள்; 400 பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நடைபெற்றிருப்பதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்.
Published on: 

தமிழ்நாட்டில் தவெக ஆட்சியமைந்ததலிருந்து, சட்டஒழுங்கு தொடர்பான பிரச்னைகள் அதிகரித்து வருவதாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அதை கண்டித்து மாநிலம் முழுவதும் இன்று (அக்டோபர் 31) திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் அக்கட்சின் தலைமை அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலும் திமுக மகளிர் அணியினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக பொதுச்செயலாளரும் எம்.பியுமான கனிமொழி பங்கேற்றார்.

கனிமொழி
கனிமொழிP

தொடர்ந்து, இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், பாதுகாப்பான தமிழகத்தை உருவாக்குவோம் எனக் கூறி முதலமைச்சர் விஜய் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்தார். ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகு, 700 கொலைகள் மற்றும் 400 பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தமிழ்நாட்டில் நடந்திருக்கின்றன. காவல்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் தானே இருக்கிறது. அதேபோல, போதைப்பொருளை ஒழிப்பேன் என ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முதல்வர் கூறினார். ஆனால், தவெக நிர்வாகியே 100 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளை வைத்திருந்திருக்கிறார்.

அதேபோல, பெண்களுக்கெதிரான குற்றங்களில் 20 வழக்குகள் தவெகவினர் மீதே உள்ளது. குற்றங்களில் ஈடுபடுவோரை தெறி படத்தில் வருவதைப்போல தெறிக்கவிடுவார் என பார்த்தோம். அப்படி செய்தால் தவெகவினரைத்தான் பாலத்துக்கு அடியில் கட்டிப்போட வேண்டும்; பாலங்களும் பத்தாது. தெரியாமல் ஓட்டு போட்டுவிட்டோம், தப்பாகிவிட்டது என்று தமிழ்நாட்டு பெண்கள் வருத்தப்படுகின்றனர். தமிழ்நாட்டு பெண்கள் ஒன்றுகூடி போராடத் தொடங்கிவிட்டனர்; நீச்சயம் மாற்றம் வரும்: விரைவில் வரும்” எனப் பேசியுள்ளார்.

Kanimozhi Alleges 700 Murders, 400 Crimes Against Women Under TVK Rule
5 தொகுதி இடைத்தேர்தல்.. முதல்வர் விஜயின் அதிரடித் திட்டம்?